குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 400

முல்லை - தலைவன் கூற்று


முல்லை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தான் மேற்கொண்ட வினை நிறைவேறப் பெற்று மீண்டுவந்து தலைவியைக் கண்ட தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, “இன்று விரைவில் தேர்விட்டு இவனை இல்லின்கண் சேரச் செய்யோமாயின் தலைவியின் காமநோயைக்களையா நிலையினே மாவேமென எண்ணி நன்று செய்தாய்! நீ தேரோடு தலைவியின் உயிரையும் தந்தாய்” என்று பாராட்டிக் கூறியது.

'சேயாறு செல்வாம் ஆயின், இடர் இன்று,
களைகலம் காமம், பெருந்தோட்கு' என்று,
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி,
முரம்பு கண் உடைய ஏகி, கரம்பைப்
புது வழிப் படுத்த மதியுடை வலவோய்! . . . . [05]

இன்று தந்தனை தேரோ
நோய் உழந்து உறைவியை நல்கலானே?
- பேயனார்.

பொருளுரை:

நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்லேமாயின் துன்பமின்றி பெரிய தோளையுடைய தலைவிக்குக் காமநோயைக் களையமாட்டேமென்று நன்மையை விரும்பி நினைத்த மனத்தையுடையவனாகி பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விள்ளும்படிபோய் கரம்பை நிலத்திலே புதிய வழியை உண்டாக்கிய தேர்ப்பாகனே நோயினால் வருந்தி உறையும் தலைவியை இறந்துபடாமல்தருதற்குக் காரணமாயினமையின் இன்றைக்கு நீ தேரையா தந்தனை? தலைவியையே தந்தனை.

முடிபு:

வலவோய், உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?

கருத்து:

உரிய காலத்தே விரைவில் தேரைச் செலுத்திய நின்திறமை பாராட்டற்குரியது