குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 317

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, "தலைவன் குறித்த பருவத்தே வருவான்" என்று தோழி கூறி வற்புறுத்தியது.

புரி மட மரையான் கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே - கைம்மிக . . . . [05]

வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?
- மதுரைக் கண்டரதத்தனார்.

பொருளுரை:

விரும்புகின்ற மடப்பத்தையுடைய மரையானினது கருமையையும் பெருமையையுமுடைய நல்ல ஆண் இனிய புளிப்பையுடைய நெல்லிக்காயைத் தின்று அருகில் உள்ளதாகிய தேன் பரவிய அழகிய மலர்கள் நடுங்கும்படி வெப்பமாகிய மூச்சை விட்டு உயர்ந்த மலையினிடத்துள்ள பசிய சுனைநீரை உண்ணுகின்ற நாட்டையுடைய தலைவன் மிகும்படி வடதிசையினின்றும் வரும் வாடைக்காற்றுக்கு அழிந்தமேகம் தென்திசையை நோக்கிச்செல்லும் தண்ணிய பனிப்பருவத்தில் இன்றியமையாத நம்மைப்பிரிந்து பொருந்துவானோ? பொருந்தான்.

முடிபு:

நாடன், தண்பனி நாளில் நம்மைவிட்டு அமையுமோ?.

கருத்து:

தலைவன் குறித்த பருவத்தில் வந்துவிடுவான்.