குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 326

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் சிறைப் புறத்தினனாகத் தோழிக்குக் கூறுவாளாய், "தலைவன் ஒரு நாள் என்னைப் பிரிந்திருந்தானாயின் எனக்கு அதனால் உண்டாகும் துன்பம் பலநாள் என்னை வருத்துகின்றது" என்று கூறி, இனிப் பிரிவு நேராதவண்ணம் வரைதலே தக்கதென்பதைத் தலைவி புலப்படுத்தியது.

துணைத்த கோதைப் பணைப் பெருந் தோளினர்
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த
சிறு மனைப் புணர்ந்த நட்பே - தோழி!
ஒரு நாள் துறைவன் துறப்பின்,
பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே . . . . [05]
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.

பொருளுரை:

தோழி! கட்டிய மாலையை யணிந்த மூங்கிலைப் போன்றபருத்த தோளையுடையாராகிய கடலில்நீர் விளையாடலைச் செய்யும் மகளிர் கடற்கரைச் சோலையிலே செய்த சிற்றிலினிடத்தே யாம் தலைவனோடு பொருந்திய நட்பு அத்தலைவன் ஒருநாள் நம்மைப் பிரிந்தால் பல நாளில் வருகின்ற துன்பத்தையுடையது.

முடிபு:

தோழி, சிறுமனையிற் புணர்ந்த நட்பு ஒரு நாள் துறைவன் துறப்பின் பன்னாள் வரூஉம் இன்னாமைத்து.

கருத்து:

தலைவன் சிறிது பொழுது பிரியினும் எனக்குப் பெரிய துன்பம் உண்டாகின்றது.