குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 274

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் பாலை நிலத்தின் வெம்மையை நினைந்து பின், "தலைவியின் இனிய தன்மைகளை நினைந்து செல்லின் அவ் வெம்மை தோற்றாது" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.

புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து
இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,
விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையின் நாள் மென்று தணியும் . . . . [05]

இன்னாக் கானமும், இனிய - பொன்னொடு
மணி மிடை அல்குல் மடந்தை
அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.
- உருத்திரனார்.

பொருளுரை:

நெஞ்சே பொன்னாலும் மணியாலும் இயற்றப்பட்ட அணிகளை அணிந்த அல்குலை உடைய தலைவியினது அழகிய நகிலை உடைய மார்பை நினைந்தேமாகிச் சென்றால் புறாவினது முதுகைப் போன்ற புல்லிய அடியை உடைய உகாய் மரத்தினது மணியைப் போன்ற செறிந்த பழங்கள் உதிரும்படி விடுகின்ற அம்பை வில்லோடு பிடித்து உயர்ந்த இடத்தின் மேல் ஏறி வழியிலே வருபவரைப் பார்க்கும் தறு கண்மையை உடைய ஆறலை கள்வர் நீரை விரும்புகின்ற வேட்கையினால் மரப் பட்டையை மென்று அவ் வேட்கை நீங்கும் இன்னாமையை உடைய காடுகளும் இனியவாகும்.

முடிபு:

மடந்தை ஆகம் உள்கினம் செலின், இன்னாக் கானமும் இனிய.

கருத்து:

தலைவியை மறவாது நினைத்திருப்பின் பிரித்து வருதல்கூடும்.