குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 340

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் இரவுக்குறிக்கண் வந்து அளவளாவுவானென்று உணர்த்திய தோழியை நோக்கி, “என் நெஞ்சம் அவர் திறத்து யாம் வருந்தும் போது உடனிருந்து வருந்தா நின்றது” என்று கூறும் வாயிலாகத் தலைவி இரவுக்குறி வருதலின் ஏதம் கருதித் தான் அஞ்சுதலைக் குறிப்பித்து அதனை மறுத்தது.

காமம் கடையின் காதலர்ப் படர்ந்து,
நாம் அவர்ப் புலம்பின், நம்மோடு ஆகி,
ஒரு பாற் படுதல் செல்லாது, ஆயிடை,
அழுவம் நின்ற அலர் வேர்க் கண்டல்
கழிபெயர் மருங்கின் ஒல்கி, ஓதம் . . . . [05]

பெயர் தரப் பெயர்தந்தாங்கு,
வருந்தும் - தோழி! - அவர் இருந்த என் நெஞ்சே.
- அம்மூவனார்.

பொருளுரை:

தோழி! காதலர் இருந்த என் நெஞ்சு, காதல் மிகுந்தால் அவரிடம் சென்று, நாம் அவர்பொருட்டு வருந்தினால், நம்முடன் தங்கி, ஒரு இடத்தில் இருக்காமல் இரு பக்கமும் சென்று, கடற்கரையில் உள்ள மலர்கள் பொருந்திய தாழை உப்பங்கழி பெருகுகின்ற இடத்தில் தளர்ந்து வெள்ளம் பெயரும்பொழுது தானும் பெயர்வதைப் போல, வருந்தும்.

முடிபு:

தோழி, நெஞ்சு காமம் கடையிற் படர்ந்து, நாம் புலம்பின் நம்மோடு ஆகி, ஒருபாற் படாதாகி வருந்தும்.

கருத்து:

தலைவன் இரவுக்குறி வரின் யான் வருந்துவேன்.

குறிப்பு:

நெஞ்சே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

காமம் கடையின் - காதல் மிகுந்தால், காதலர்ப் படர்ந்து - காதலரிடம் சென்று, நாம் அவர்ப் புலம்பின் - நாம் அவர்பொருட்டு வருந்தினால், நம்மோடு ஆகி - நம்முடன் தங்கி, ஒரு பால் படுதல் செல்லாது - ஒரு கூற்றிலே இருக்காமல், ஆயிடை - அவற்றின் இடையே, அழுவம் நின்ற அலர் வேய்க் கண்டல் - கடற்கரையில் இருந்த மலர்கள் பொருந்திய தாழை, கழி பெயர் மருங்கின் ஒல்கி - உப்பங்கழி பெருகுகின்ற இடத்தில் தளர்ந்து, ஓதம் - வெள்ளம், பெயர்தரப் பெயர்தந்தாங்கு - பெயரும் பொழுது தானும் பெயரும், வருந்தும் தோழி, வருந்தும் தோழி, அவர் இருந்த என் நெஞ்சே - தலைவர் இருந்த என் நெஞ்சம்