குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 004

நெய்தல் - தலைமகள் கூற்று


நெய்தல் - தலைமகள் கூற்று

பாடல் பின்னணி:

பிரிவைத் தாங்க முடியாமல் தலைவி வருந்துகின்றாள் என்று கவலையுற்ற தோழிக்கு, ‘தலைவன் முன்பு எனக்குச் செய்த தண்ணளியை நினைத்து ஆற்றினேன்’ என்பது புலப்படத் தலைவி சொன்னது.

நோம் என் நெஞ்சே, நோம் என் நெஞ்சே,
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்,
அமைவிலர் ஆகுதல், நோம் என் நெஞ்சே.
- காமஞ்சேர் குளத்தார்.

பொருளுரை:

வருந்துகின்றது என் நெஞ்சு. வருந்துகின்றது என் நெஞ்சு. இமைகளைத் தீயச் செய்யும் என் கண்ணீரைத் துடைத்து எனக்குப் பொருத்தமாக இருந்த என் காதலர் இப்பொழுது பொருந்தாதவராக ஆகி விட்டார். வருந்துகின்றது என் நெஞ்சு. அமைதற்கு அமைந்த (3) - உ. வே. சாமிநாதையர் உரை - அளவளாவதற்கு அமைந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி பொருந்திய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - மனம் பொருந்திய.

குறிப்பு:

நெஞ்சே - ஏ அசை நிலை. தமிழண்ணல் உரை - நோம் என் நெஞ்சே என மூன்று முறை அடுக்கும் பாடல் அமைப்பே துன்பத்தின் மிகுதியை புலப்படுத்தி விடுகின்றது. அமைதற்கு அமைந்த (3) - உ. வே. சாமிநாதையர் உரை - அளவளாவதற்கு அமைந்த, பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஆற்றியிருத்தற்குக் காரணமான தண்ணளி பொருந்திய, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - மனம் பொருந்திய.

சொற்பொருள்:

நோம் என் நெஞ்சே - வருந்தும் என் நெஞ்சு (நெஞ்சே - ஏகாரம் அசைநிலை), நோம் என் நெஞ்சே - வருந்தும் என் நெஞ்சு (நெஞ்சே - ஏகாரம் அசைநிலை), இமை - கண் இமைகள், தீய்ப்பன்ன - சுடுவதைப் போல், கண்ணீர் தாங்கி - கண்ணீரைத் துடைத்து, அமைதற்கு அமைந்த - பொருத்தமாக அமைந்த, தண்ணளி செய்த, நம் காதலர் - என்னுடைய காதலர், அமைவிலர் ஆகுதல் - பொருந்தாதவராய் ஆகியதால், நோம் என் நெஞ்சே - வருந்தும் என் நெஞ்சு (நெஞ்சே - ஏகாரம் அசைநிலை)