குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 015

பாலை - செவிலி கூற்று


பாலை - செவிலி கூற்று

பாடல் பின்னணி:

செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.

பறைபடப் பணிலம் ஆர்ப்ப, இறை கொள்பு
தொன் மூது ஆலத்துப் பொதியில் தோன்றிய
நாலூர்க் கோசர் நன் மொழி போல
வாயாகின்றே தோழி, ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு . . . . [05]

தொகு வளை முன் கை மடந்தை நட்பே.
- ஔவையார்.

பொருளுரை:

அழகிய வீரக்கழலையும் சிவந்த இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய தலைவனோடு தொக்க வளையல்களை முன்கையில் அணிந்த உன்னுடைய மகள் கொண்ட நட்பானது, மிகப் பழைய ஆலமரத்தைக் கொண்ட பொது இடத்தில் தங்குதலைக் கொண்டு தோன்றிய கோசர்களின் நல்ல சொற்கள் உண்மையாவதைப் போல, மணப்பறைகள் ஆரவாரிக்க சங்குகள் ஒலிக்க திருமணம் செய்ததால், உண்மையாகின்றது தோழி!

குறிப்பு:

அகநானூறு 251 - புனை தேர்க் கோசர் தொல்மூது ஆலத்து அரும் பணைப் பொதியில் இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க. பறைபட (1) - உ. வே. சாமிநாதையர் உரை - முரசு முழங்க, பறையும் சங்கும் மங்கல நாளில் முழங்குவன, பொ. வே. சோமசுந்தரனார் உரை - மணப் பறைகள் ஆரவாரிப்பவும். நட்பே - வாயாகின்றே - ஏகாரம் அசை நிலை, நட்பே - ஏகாரம் அசை நிலை. கொடுப்போர் இன்றியும் - கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்து உடன் போகிய காலையான (கற்பியல் 3, தொல்காப்பியம்).

சொற்பொருள்:

பறைபடப் பணிலம் ஆர்ப்ப - மணப்பறைகள் ஆரவாரிக்க சங்குகள் ஒலிக்க, இறை கொள்பு - தங்கிய, தொன் மூது ஆலத்துப் பொதியில் - மிகப் பழைய ஆலமரத்தைக் கொண்ட பொது இடத்தில், தோன்றிய - தோன்றிய, நாலூர்க் கோசர் நன் மொழி போல வாயாகின்றே தோழி - நான்கு ஊரில் உள்ள கோசர்களின் நல்ல சொற்கள் உண்மையாவதைப் போல உண்மையாகின்றது தோழி, ஆய் கழல் சேயிலை வெள் வேல் விடலையொடு - அழகிய வீரக்கழலையும் சிவந்த இலையையுடைய வெள்ளிய வேலையும் உடைய தலைவனோடு, தொகு வளை முன் கை மடந்தை நட்பே - தொக்க வளையல்களை முன்கையில் அணிந்த நின் மகள் கொண்ட நட்பு