குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 200

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பருவம் வந்தகாலத்துக் கவன்ற தலைவியை நோக்கி, “இது காரன்று; வம்பு” எனக்கூறிய தோழிக்கு, “கார்ப் பருவத்துக்குரிய மேகமுழக்கமும் புதுவெள்ளமும் உள்ளன; இக்காலத்தும் தலைவர் வந்திலர்; அவர் நம்மை மறந்தார் போலும்!” என்று தலைவி கூறி வருந்தியது.

பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ்
மீமிசைத் தாஅய், வீசுமந்து வந்து,
இழிதரும் புனலும்; வாரார் - தோழி!
மறந்தோர் மன்ற; மறவாம் நாமே
கால மாரி மாலை மா மலை . . . . [05]

இன்இசை உருமினம் முரலும்
முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே.
- அவ்வையார்.

பொருளுரை:

தோழி! கார்ப் பருவத்துப் பெய்தற்குரிய மழையையுடைய மாலைக் காலத்து வரும் கரிய மேகங்கள் வித்தி வானோக்கும் புலமுடையாருக்கு இனிய ஒலியையுடைய இடியேற்றை யுடையனவாகி முழங்கும்; முன்பு மழைபெய்த குன்றத்தின்கண் மலர் மணக்கின்ற தண்ணிய கலங்கலின்மேலே பரவிய மலர்களைச் சுமந்து வந்து அருவிப்புனலும் வீழும்; கார்ப் பருவத்திற்கு முன்னரே வருவேமென்ற பாதுகாப்பைச் செய்து அகன்ற தலைவர் இன்னும் வாராராயினர்; அவர் நிச்சயமாக நம்மை மறந்தார்; நாம் அவரை மறத்தல் செய்யாம்.

முடிபு:

தோழி, மழை முரலும்; புனலும் இழிதரும்; அகன்றோர் வாரார்; மறந்தோர் மன்ற; நாம் மறவாம்.

கருத்து:

கார்ப்பருவம் வரவும் தலைவர் வந்தாரல்லர்.