குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 058

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தன்னை இடித்துக் கூறிய தோழனை நோக்கி, தலைவன் இவ்வாறு கூறுகின்றான்.

இடிக்கும் கேளிர்! நுங்குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று, மற்றில்ல,
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்,
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப் . . . . [05]

பரந்தன்று இந்நோய், நோன்று கொளற்கு அரிதே.
- வெள்ளிவீதியார்.

பொருளுரை:

இடித்துரைக்கும் நண்பரே! நுமது காரியமாக என் காதல் நோயை நிறுத்தல் செய்தால் நல்லது. பிற இல்லை. கதிரவன் காய்தலாலே வெம்மையுடைய பாறையில், கை இல்லாத ஊமை ஒருவன் தன் கண்ணினால் பாதுகாக்கும் வெண்ணையைப் போலப் பரவியுள்ளது என்னுடைய இந்தக் காதல் நோய். இதைப் பொறுத்துக் கொள்வது கடினம்.

குறிப்பு:

கழறுதல் - தலைவனைப் பாங்கன் இடித்துரைத்தல். கேளிர் (1) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - கேளிர், நும் என்னும் பன்மைச் சொற்கள் செறல்பற்றி நண்பன் ஒருவனுக்கே வந்தன. மற்றில்ல (2) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பிற இலவாகும், உ. வே. சாமிநாதையர் உரை - மன் தில்ல, தில் விழைவின்கண் வந்தது, தமிழண்ணல் உரை - மன் தில்ல, தில் விருப்பத்தை உணர்த்தும் இடைச்சொல். ஆற்றினோ - ஓகாரம் அசை நிலை, அரிதே - ஏகாரம் அசை நிலை. மன் - கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:

இடிக்கும் கேளிர் - இடித்துரைக்கும் நண்பரே, நுங்குறை ஆக - நுமது காரியமாக, நிறுக்கல் ஆற்றினோ நன்று - என் காதல் நோயை நிறுத்தல் செய்தால் நல்லது, மற்றில்ல - பிற இல்லை (அல்லது மன் தில்ல), ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில் - கதிரவன் காய்தலாலே வெம்மையுடைய பாறையினிடத்தே, கை இல் ஊமன் - கை இல்லாத ஊமை ஒருவன், கண்ணின் காக்கும் வெண்ணெய் - கண்ணினால் பாதுகாக்கும் வெண்ணை, உணங்கல் போல - உருகிய வெண்ணையைப் போல, பரந்தன்று இந்நோய் - பரவியுள்ளது இந்த காதல் நோய், நோன்று கொளற்கு அரிதே - இதைப் பொறுத்துக் கொள்வது அரிது