குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 198

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

“இனி யாங்கள் தினைப்புனங் காக்கச் செல்கின்றேம்; நீ ஆண்டேவருக. ஈண்டு எம்முடைய தாய் வருவாளாதலின் வாரற்க” என்று தோழி தலைவனுக்குக் கூறியது.

யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர் . . . . [05]

எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
- கபிலர்.

பொருளுரை:

யாமரத்தை வெட்டிய மரங்களைச் சுட்ட வழியில் கரும்பைப் போன்ற அடியை யுடையனவாகிய பசிய காம்பையுடைய சிவந்த தினையினது மடமை மிக்க பிடியினது வளைந்த கையைப் போன்றனவாகி பால் நிரம்பி கரியை எடுக்கின்ற குறட்டைப்போல வளைந்த செறிந்த குலையையுடைய பசிய கதிர்களில் தின்னும் பொருட்டு வீழ்கின்ற கிளிகளை ஓட்டுவேமாகிச் செல்வேம்; இவ்விடத்தில் தாய் வருவாள்; பகைவரைக் கொல்லும் போர்க்குரிய வேற்படை விளங்குகின்ற பெரிய கைகளையுடைய மலையனது முள்ளூர்க் கானத்தில் வளர்ந்த சந்தனம் மணக்கின்ற மார்பினையுடையை யாகி வருதலை யொழிக; இஃது எங்கள் விருப்பம்.

முடிபு:

இயவில் சேறும்; யாய் வருகுவள்; வாரற்க.

கருத்து:

இனித் தினைப் புனத்தே வந்து தலைவியோடு அளவளாவுவாயாக.