குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 250

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவியைப் பிரிந்து சென்று வினைமுற்றி மீண்டு வரும் பொழுது தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, "இன்று மாலை வருவதற்குள் தலைவி இருக்கும் இடத்திற்கு விரைவில் தேரைச் செலுத்துவாயாக" என்றது.

பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு,
இரலை நல் மான் நெறிமுதல் உகளும்
மாலை வாரா அளவை, கால் இயல்
கடு மாக் கடவுமதி - பாக! - நெடு நீர்ப்
பொரு கயல் முரணிய உண்கண் . . . . [05]

தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.
- நாமலார் மகனார் இளங்கண்ணனார்.

பொருளுரை:

தேர்ப்பாகனே பருக்கைக் கற்களை உடைய பள்ளத்திலே தங்கிய நீரை உண்டு ஆண்மான் பெண் மானோடு வழியினிடத்து துள்ளி விளையாடுகின்ற மாலைக் காலம் வருவதற்கு முன்னே ஆழ்ந்த நீரில் உள்ள ஒன்றை ஒன்று எதிர்ந்த இரண்டு கயல்களை ஒத்த மையுண்ட கண்களையும் ஆராய்ந்த இனிய சொற்களையும் உடைய தலைவி துன்பத்தால் சுழலுதலினின்றும் நீங்க காற்றின் இயல்பை உடைய விரைகின்ற குதிரையைச் செலுத்துவாயாக.

முடிபு:

பாக, மாலை வாரா அளவை, கிளவி உய மாக்கடவுமதி.

கருத்து:

மாலை வருவதற்கு முன் தலைவி இருக்கும் இடத்திற்குத் தேரைச் செலுத்துவாயாக.