குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 181

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச் செய்து கொண்டிருத்தல் சாலும்; தலைவனைக் குறை கூறல் வேண்டா" என்று தலைவி கூறியது.

இது மற்று எவனோ - தோழி! - துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் . . . . [05]

திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?
- கிளிமங்கலங் கிழார்.

பொருளுரை:

தோழி! பெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடைய பெண்ணெருமையானது உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும் அகலச் செல்லாமல் பக்கத்திலுள்ள பசிய பயிர்களை மேய்வதற் கிடமாகிய ஊரையுடைய தலைவனது செல்வத்தையுடைய மனைவாழ்வுக்குரிய பல கடப்பாடுகளை மேற்கொண்ட பெரிய முதிய பெண்டிராகிய நமக்கு புலவிக் காலத்தினிடையே தலைவர் இத்தகைய ரென்னும் இனிமையில்லாத கூற்றாகிய இதனாற் பயன் யாது?

முடிபு:

தோழி, ஊரன் மனைக்கடம் பூண்ட நமக்கு இன்னாக்கிளவி எவன்?

கருத்து:

தலைவனைக் குறை கூறாமல் நம் கடப்பாடுகளை நாம் செய்வோமாக.