குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 193

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றதோழி, "நீ வரையு நாளளவும் நின் நலம் தொலையாமல் ஆற்றி யிருந்தாய்" என்று பாராட்ட அது கேட்ட தலைவி, “அஃது என் வலியன்று; தலைவன் செய்த தண்ணளியே அத்தகைய நிலையைத் தந்தது” என்றது.

மட்டம் பெய்த மணிக் கலத்தன்ன
இட்டு வாய்ச் சுனைய பகுவாய்த் தேரை,
தட்டைப் பறையின், கறங்கும் நாடன்
தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின்
மணந்தனன்மன் எம் தோளே . . . . [05]

இன்றும், முல்லை முகை நாறும்மே.
- அரிசில் கிழார்.

பொருளுரை:

தோழி! கள்ளைப் பெய்த நீலக் குப்பிகளைப் போன்ற சிறிய வாயையுடைய சுனையின்கண் உள்ளனவாகிய பிளந்த வாயையுடைய தேரைகள் கிளிகடி கருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன் களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடிய வெண்ணிலாவின்கண் என் நீண்ட தோள்களை தழுவினான்; அதனால் இக்காலத்தும் அவன் மேனியினது முல்லையினது மொட்டறா மலரின் மணத்தை என் தோள்கள்வீசா நிற்கும்.

முடிபு:

நாடன், தொல்லைத் திங்கள் நிலவில் தோளை மணந்தனன்; இன்றும் முல்லை முகை நாறும்.

கருத்து:

தலைவன் களவுக் காலத்துச் செய்த இன்னருள் இன்றளவும் மாறாது என்னைப் பாதுகாத்தது.