குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 348

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிவானென்றறிந்து வருந்திய தலைவியை நோக்கி, "அவர் போவாராயின் நின்துன்பத்தைக் காணாது செல்வாரோ? செல்லார்" என்று தோழி கூறியது.

தாமே செல்பஆயின், கானத்துப்
புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த
சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய்,
இதழ் அழிந்து ஊறும் கண்பனி, மதர் எழில்
பூண் அக வன் முலை நனைத்தலும் . . . . [05]

காணார், கொல்லோ - மாணிழை! - நமரே?
- மாவளத்தனார்.

பொருளுரை:

மாட்சிமைப்பட்ட ஆபரணங்களை அணிந்தோய் நம் தலைவர் நம்மைவிட்டுத் தாம் மட்டும் பிரிந்து செல்வாராயின் காட்டினிடத்து மேய்புலத்தைத் தேடி செல்லும் யானையினது கொம்பினிடத்தே முறிந்து தங்கிய சிறிய பூக்களையுடைய முல்லைக் கொடியின் கொம்பைப்போல இமையைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளி பரவி மதர்த்த அழகையுடைய அணிகலன்களைத் தன்னிடத்தே உடைய அழகையுடைய நின் நகில்களை நனைத்தலையும் காணாரோ!

முடிபு:

மாணிழை, நமர் தாமே செல்பவாயின், காணார் கொல்லோ!

கருத்து:

தலைவர் நின் வருத்தத்தை யறிந்து போதலை யொழிவர்.