குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 359

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வாயில்பெறாத தலைமகன் மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாகத்தானே புக்குப்பாயலிற் புதல்வனைத் தழுவிக்கொண்ட காலத்தில் தலைவி ஊடல்தணிந்ததைத் தோழி பாணனுக்குக் கூறியது.

கண்டிசின் - பாண! - பண்பு உடைத்து அம்ம
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை,
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ,
புதல்வற் தழீஇயினன் விறலவன்; . . . . [05]

புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.
- பேயனார்.

பொருளுரை:

பாண! வெற்றியையுடைய தலைவன் மாலைக்காலத்திலே விரிந்த இளைய வெள்ளிய நிலாவொளியில் குறிய கால்களையுடைய கட்டிலினிடத்தேயுள்ள நறிய மலர் பரப்பிய படுக்கையில் படுத்தலையுடைய யானையைப்போலப் பெருமூச்சு விட்டானாகி விருப்பதினால் தன் பிள்ளையைத் தழுவினான் அப்பிள்ளையின் தாயாகிய தலைவி அத்தலைவனது புறத்தைத் தழுவினாள் இதனைப் பார்ப்பாயாக; இச்செயல் அழகையுடையது!

முடிபு:

பாண, விறலவன் புதல்வற்றழீஇயினன்; தாய் அவன்புறங்கவைஇயினள்; கண்டிசின்; பண்புடைத்து!

கருத்து:

தலைவி புலவி தணிந்தாள்.