குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 277

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைமகன் குறித்துச் சென்ற பருவம் வருங்காலம் யாதென்று தோழி அறிவரை வினாவியது.

ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி,
அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பில் பெறீஇயரோ, . . . . [05]

நீயே - "மின்னிடை நடுங்கும் கடைப் பெயல் வாடை,
எக்கால் வருவது?" என்றி;
அக்கால் வருவர், எம் காதலோரே.
- ஓரிற் பிச்சையார்.

பொருளுரை:

அறிவ! மின்னைப் போன்ற இடையை உடைய தலைவி நடுங்குதற்குக் காரணமான இறுதியில் மழையை உடைய வாடைக்கு உரிய காலம் எப்பொழுது வருவது என்பாயோ அப்போது எம்முடைய தலைவர் வருவர்!; குற்றமற்ற தெருவினிடத்தே நாய் இல்லாத அகன்ற வாயிலில் செந்நெற் சோற்று உருண்டையும் மிக வெள்ளிய நெய்யும் ஆகிய ஒரு வீட்டில் இடும் பிச்சையை பெற்று வயிறு நிரம்ப உண்டு அற்சிரக் காலத்திற்குரிய விரும்பத் தக்க வெப்பத்தை உடைய நீரை நீரைச் சேமித்து வைக்கும் செப்பில் பெறுவாயாக.

முடிபு:

வாடை எக்கால் வருவதென்றி; அக்கால் எம் காதலோர்வருவர். நீ தெருவில் பிச்சையை மாந்தி நீரைப் பெறீஇயர்.

கருத்து:

வாடை வீசும் பருவம் எப்பொழுது வரும்?