குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 053

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவு நீட்டித்தவழித் தோழி தலைவனிடம் உரைத்தது.

எம் அணங்கினவே மகிழ்ந, முன்றில்
நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும்
செந்நெல் வான் பொரி சிதறியன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை, . . . . [05]

நேர் இறை முன் கை பற்றிச்
சூரர மகளிரோடு உற்ற சூளே.
- கோப்பெருஞ்சோழன்.

பொருளுரை:

தலைவனே! இல்லத்தின் முன் முற்றத்தில் புன்க மரத்தின் அரும்பு முதிர்ந்த மலர்கள் உதிர்ந்த வெண்மணலில், வேலனால் அமைக்கப்பட்ட வெறியாட்டம் எடுக்கும் இடந்தொறும் செந்நெல்லின் வெள்ளை பொரி சிதறினாற்போன்ற தோற்றத்தைத் தரும் மணல் மேடுகள் பொருந்திய எங்கள் ஊரின் அகன்ற நீர்த்துறையில், என் தோழியின் நேரிய மூட்டுவாயினையுடைய முன்கையைப் பிடித்துக்கொண்டு, தெய்வ மகளிரைச் சுட்டி நீ கூறிய உறுதிமொழிகள் எம்மைத் துன்புறுத்தின.

குறிப்பு:

நெற்பொரியைப் போல் புன்கு - அகநானூறு 116 - பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறை, பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, நற்றிணை 9 - பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி, குறுந்தொகை 53 - நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் வேலன் புனைந்த வெறி அயர் களந்தொறும் செந்நெல் வான் பொரி சிதறியன்ன, குறுந்தொகை 341 - பொரிப் பூம் புன்கொடு, ஐங்குறுநூறு 347 - பொரிப்பூம் புன்கின், ஐங்குறுநூறு 368 - எரிப்பூ இலவத்து ஊழ் கழி பன் மலர் பொரிப்பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும். இறைச்சி - திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - புன்கின் பூ செந்நெற்பொரியைச் சிதறினாற் போலத் தோன்றும் என்றதனானே நீ உற்ற பொய்ச்சூளுறவுகளும் மெய்ச்சூளுறவுகளேபோல எம்மை மயங்கச் செய்தன என்பதாம். எம் அணங்கினவே (1) - உ. வே. சாமிநாதையர் உரை - சூள் பலமுறை செய்யப்பட்டனவாதலின் அணங்கின என்று பன்மையாற் கூறினாள். வேலன் - நச்சினார்க்கினியர் உரை திருமுருகாற்றுப்படை 222 - பிள்ளையார்வேலைத் (பிள்ளையான முருகனின் வேல்) தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்றார். சூளே - ஏகாரம் அசை நிலை. இரா. இராகவையங்கார் உரை - இதனைத் தலைவி கூறியதாகக் கொள்வர் நச்சினார்க்கினியர் (தொல்காப்பியம், களவியல் 10). அங்ஙனமாயின் சூள் உரைத்த நின்னையும் நீ கைப்பற்றிய என்னையும் அச் சூள் அணங்குதல் தகும். என் வாய்க் கேட்ட என் தோழியும் அணங்குதல் மருட்கைத்தாம் என்பது தெரிய எம் அணங்கின என்றாளாகக் கொள்க.

சொற்பொருள்:

எம் அணங்கினவே - எம்மைத் துன்புறுத்தின, மகிழ்ந - தலைவனே, முன்றில் - இல்லத்தின் முன்னிடத்தில் (முன்றில் - இல்முன்), நனை முதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல் - புன்க மரத்தின் அரும்பு முதிர்ந்த மலர்கள் உதிர்ந்த வெண்மணல், வேலன் புனைந்த - வேலனால் அமைக்கப்பட்ட, வெறி அயர் களந்தொறும் - வெறியாட்டம் எடுக்கும் இடந்தொறும், செந்நெல் வான் பொரி சிதறியன்ன - செந்நெல்லின் வெள்ளை பொரி சிதறினாற்போல, எக்கர் நண்ணிய - மணல் மேடுகள் பொருந்திய, எம் ஊர் வியன் துறை - எங்கள் ஊரின் அகன்ற நீர்த்துறையில், நேர் இறை முன் கை பற்றி - நேரிய மூட்டுவாயினையுடைய முன்கையைப் பிடித்துக்கொண்டு, சூரர மகளிரோடு உற்ற சூளே - தெய்வ மகளிரைச் சுட்டி கூறிய உறுதிமொழி