குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 014

குறிஞ்சி - தலைவன் கூற்று


குறிஞ்சி - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன் அத்தோழி கேட்பக் கூறியது.

அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிக தில் அம்ம, இவ்வூரே! மறுகில்,
நல்லோள் கணவன் இவன் எனப் . . . . [05]

பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.
- தொல்கபிலர்.

பொருளுரை:

அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறி) பெறுவேனாக. நான் அவளைப் பெற்ற பின், இந்த ஊரார் அதை அறிந்து கொள்ளட்டும். அவ்வாறு, ஊரார் பலரும் தெருவில் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும் போது, நாங்கள் சிறிது நாணமடைவோம்.

குறிப்பு:

நாணுகம் (6) - உ. வே. சாமிநாதையர் உரை - யாம் என்பது தலைவியையும் உடன்படுத்தி. தில் - காலம் பற்றி வந்த இடைச்சொல், அம்ம, ஏகாரம் - அசை நிலைகள். வை- வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91). வார்- வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்:

அமிழ்து பொதி - அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்று (இனிமையான சொற்களைப் பேசும்), செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த - அஞ்சுவதற்குக் காரணமான, வார்ந்து இலங்கு - நேராக விளங்கும், வை எயிற்று - கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை - சில சொற்களைப் பேசும் பெண்ணை, (என் தலைவியை), பெறுக - பெறுவேனாக, தில் - விழைவின்கண் (விருப்பத்தின்கண்) வந்த இடைச்சொல், அம்ம - ஓர் அசைச் சொல், பெற்றாங்கு - பெற்ற பின், அறிக - அறிந்து கொள்ளட்டும், தில் - காலம் பற்றி வந்த இடைச்சொல், அம்ம - ஓர் அசைச் சொல், இவ்வூரே- இவ்வூரவர், மறுகில் - தெருவில், நல்லோள் கணவன் - நல்ல பெண்ணின் கணவன், இவன் என்று, பல்லோர் கூற - பலரும் சொல்ல, யாஅம்- நானும் தலைவியும் (இசைநிறை அளபெடை), நாணுகம் - நாணமடைவோம், சிறிதே- சிறிது (ஏகாரம் அசைநிலை)