குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 025

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் நீண்ட காலம் தன்னை மணஞ்செய்யாமல் இருத்தல் பற்றி தலைவி வருந்தித் தோழிக்குக் கூறியது.

யாரும் இல்லைத், தானே கள்வன்,
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே . . . . [05]
- கபிலர்.

பொருளுரை:

தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில், அங்கே சான்றாகத் தக்கார் யாரும் இல்லை. என் நலத்தை நுகர்ந்த கள்வன் அவன். அவன் என்னிடம் கொடுத்த உறுதி மொழியிலிருந்து தவறினால் நான் என்ன செய்வேன்? நான் அவனோடு இருந்த நாளில், அங்கே ஓடுகின்ற நீரில் செல்லுகின்ற ஆரல் மீனின் வருகையைப் பார்த்துக் கொண்டு, தினைத்தாளைப் போன்ற சிறிய பசுங்கால்களையுடைய குருகு மட்டுமே இருந்தது.

குறிப்பு:

பாட வேறுபாடு - வரி 1 - யாரும் இல்லைத் தானே களவன். அகநானூறு 246 - கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக. களவன் - சாட்சியாக இருந்தவன். குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (5) - இரா. இராகவையங்கார் உரை - குருகு பாராதாயினும் அக்களத்தில் அவன் சூளுரைத்தது கேட்டதேயாம் என்று ‘குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே’ என்றாள். உ. வே. சாமிநாதையர் உரை - அவன் மணந்த நிகழ்ச்சியை எண்ணி பெருமிதம் கொள்ளும் தலைவி தாம் என்று பன்மையாற் கூறி கள்வனாதலைக் கூறுகையில் உண்டான செறல்பற்றி தான் என்று ஒருமையாற் கூறியதாகக் கொள்க. தலைவனைக் கள்வன் என்றல் - நற்றிணை 28 - கள்வர் போலக் கொடியன், நற்றிணை 40 - நள்ளென் கங்குல் கள்வன் போல. யாரும் - உம்மை முற்றுப்பொருள், தானே - ஏகாரம் பிரிநிலை, செய்கு - தன்மை ஒருமை வினைமுற்று, ஓகாரம் அசைநிலை, குருகும் - உம்மை இழிவு சிறப்பு, ஞான்றே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

யாரும் இல்லை - யாரும் அங்கு இல்லை, தானே கள்வன்- அவன் கள்வன், அக்களத்தில் இருந்தவன் அவனே, சாட்சியாக இருந்தவன் அவனே, தான் அது பொய்ப்பின் - அவன் உறுதிமொழி பொய்யானால், யான் எவன் செய்கோ - நான் என்ன செய்வேன், தினைத்தாள் அன்ன - தினையின் அடிப்பகுதியைப் போல, சிறு பசுங்கால - சிறிய பசிய கால்கள், ஒழுகு நீர் - ஓடிச் செல்லும் நீர், ஆரல் பார்க்கும் - விலாங்கு மீனின் வருகையைப் பார்த்திருக்கும், குருகும் உண்டு - குருகு இருந்தது, தான் மணந்த ஞான்றே - தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில்