குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 390

பாலை - கண்டோர் கூற்று


பாலை - கண்டோர் கூற்று

பாடல் பின்னணி:

பாலை நிலவழியே சேர்ந்துபோகும் தலைவனையும் தலைவியையும் கண்டோர், “பொழுது போயிற்று; ஆறலை கள்வரால் ஏதம் நிகழும்” என்று அறிவுறுத்தி மேற்செல்லுதலைத் தடுத்தது.

எல்லும் எல்லின்று; பாடும் கேளாய்
செல்லாதீமோ, சிறுபிடி துணையே!
வேற்று முனை வெம்மையின், சாத்து வந்து இறுத்தென,
வளை அணி நெடு வேல் ஏந்தி,
மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே. . . . . [05]
- உறையூர் முதுகொற்றனார்.

பொருளுரை:

சிறிய யானையைப்போன்ற துணைவியை உடையவனே! ஒலிக்கும் ஒலிகளைக் கேள்! இந்த வழியில் செல்லாதே! கதிரவனின் ஒளி அடங்கி விட்டது. வணிகர்களின் கூட்டம் வந்ததால், வளையல் அணிந்த, பெரிய வேல்களைக் கொண்ட கள்வர்கள் தங்களுடைய தண்ணுமை முரசை அடிக்கன்றனர். அந்த ஒலி காவல் காட்டிற்கு வந்து செல்கின்றது. அக்கள்வர்களின் பகைமையினால் இது போர்க்களம் போன்று தோன்றுகின்றது.

முடிபு:

சிறுபிடி துணையே, எல்லும் எல்லின்று; குரலின் பாடும் கேளாய்; செல்லாதீம்.

கருத்து:

மேலே இந்நிலத்திற் செல்லுதலைத் தவிர்மின்.

குறிப்பு:

குரலே - ஏகாரம் அசை நிலை. எல்லும் எல்லின்று (1) - உ. வே. சாமிநாதையர் உரை - சூரியனும் விளக்கம் இலனானான், இரா. இராகவையங்கார் உரை - பகற்பொழுதும் இருண்டு சென்றது, பொ. வே. சோமசுந்தரனார் உரை - ஞாயிறும் விளக்கமிலதாயிற்று. அகநானூறு 110, அகநானூறு 370 பாடல்களில் ‘எல்லும் எல்லின்று’ என்பதற்கு - வேங்கடசாமி நாட்டார் உரை - பகலும் ஒளி இழந்தது, பகலும் ஒளி குறைந்தது, பொ. வே. சோமசுந்தரனார் உரை - பகற்பொழுது ஒளி இல்லையாய் இருந்தது, பகற்பொழுதும் ஒளி குன்றிற்று. வளையணி நெடுவேல் ஏந்தி (4) - உ. வே. சாமிநாதையர் உரை - வளையை அணிந்து நெடிய வேலை ஏந்தி, தமிழண்ணல் உரை - தோள்வளை அணிந்த கையில் நெடிய வேலை ஏந்தி, இரா. இராகவையங்கார் உரை - வளையம் அணிந்த நெடிய வேலைத் தாங்கி. செல்லாதீமோ (2) - செல்லாதீம் முன்னிலைப் பன்மை வியங்கோள் வினைமுற்று.

சொற்பொருள்:

எல்லும் எல்லின்று - வெளிச்சம் போய் விட்டது, பாடுங் கேளாய் - ஒலிக்கும் ஒலிகளைக் கேள், செல்லாதீமோ - செல்லாதீர், சிறு பிடி துணையே - சிறிய யானையைப்போல் உள்ள பெண்ணுக்கு துணைவனே, வேற்று முனை - போர்க்களம், வெம்மையில் - பகைமை, சாத்து - வணிகர்கள், வந்திறுத்தென - வந்ததால், வளையணி - வளையல் அணிந்த, நெடுவேல் - நீண்ட வேலை, ஏந்தி - தூக்கிக் கொண்டு, மிளை வந்து - காவல் காட்டுக்கு வந்து, பெயரும் - விலகும், தண்ணுமைக் குரலே - தண்ணுமை முரசின் குரல்