குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 253

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பிரிவிடை வருந்திய தலைவியை நோக்கி, "தலைவர் நின் நிலையை உணர்ந்திலர்; உணரின் தம்வினை முற்றுதலையும் ஓராது உடனே மீள்வர்" என்று தோழி கூறி ஆற்றுவித்தது.

கேளார் ஆகுவர் - தோழி! - கேட்பின்,
விழுமிது கழிவது ஆயினும், நெகிழ்நூல்
பூச்சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்
நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ
ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல், . . . . [05]

புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை
ஆறு செல் மாக்கள் சேக்கும்
கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.
- பூங்கண்ணனார்.

பொருளுரை:

தோழி! ஒன்றோடு ஒன்று உராய்ந்து ஒலிக்கின்ற மூங்கில்கள் ஓங்கி வளர்ந்த உயர்ந்த மலைப் பக்கத்தில் புலி தனக்குரிய உணவைச் செலுத்தி வைத்திருந்த புலால் நாற்றம் வீசும் கற்குகை யினிடத்து வழிச் செல்லும் மனிதர் தங்கும் சிகரங்கள் உயர்ந்த விளக்கத்தை உடைய மலைகளை கடந்து சென்ற தலைவர் நின் துயரைக் கேளார் ஆவர்; கேட்டாராயின் சிறந்த பொருள் நீங்குவதாக இருப்பினும் நெகிழ்ந்த நூலால் கட்டிய மலர் மாலைகள் சேர்ந்த படுக்கையினிடத்தே இருந்து வருந்தி பெரிய அழகு நீங்கிய நினது இக் காலத்துள்ள துயரமானது கெடும் படி பின்பும் தாமதியாமல் வருவார்.

முடிபு:

தோழி, மலையிறந்தோர் கேளாராகுவர்; கேட்பின் நீடலர்.

கருத்து:

அவர் நின் நிலையை அறிந்திலர்; அறியின் உடனே மீள்வர்.