குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 007

பாலை - கண்டோர் கூற்று


பாலை - கண்டோர் கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் தங்கள் குடும்பத்தை விட்டு நீங்கி உடன்போன வேளையில், எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால் அவ்விருவருக்கும் திருமணம் நடைபெறவில்லை என்று உணர்ந்து இரங்கிக் கூறியது.

வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே, நல்லோர்
யார் கொல்? அளியர் தாமே, ஆரியர்
கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும் . . . . [05]

வேய் பயில் அழுவம் முன்னியோரே.
- பெரும்பதுமனார்.

பொருளுரை:

வில்லை வைத்திருக்கும் அவன், கால்களில் கழல்களை அணிந்திருக்கின்றான். வளையல் அணிந்த அவள், கால்களில் சலங்கை அணிந்துள்ளாள். இந்த நல்லவர்கள் யாரோ? பரிதாபத்திற்கு உரியவர்கள் ஆகத் தோன்றுகின்றார்கள், ஆரியக் கழைக் கூத்தாடிகள் கயிற்றின் மேல் ஆடும்பொழுது கொட்டப்படும் பறைக் கொட்டு போல், வீசும் காற்றினால் வாகை மரங்களின் விதைக் கூடுகள் நடுங்கி ஒலிக்கும் இந்த மூங்கில் நிறைந்த பாலை நிலப்பரப்பில், கடந்து செல்ல எண்ணி வருபவர்களுடன் வரும் இவர்கள்!

குறிப்பு:

சிலம்பு கழிதல் என்பது திருமணத்திற்கு முன் நடந்த ஒரு சடங்கு. உ. வே. சாமிநாதையர் உரை - தலைவனால் தலைவி வரைந்து கொள்ளப்படாமையைப் புலப்படுத்துவார், ‘மெல்லடி மேலவும் சிலம்பே’ என்றார். மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குவதற்கு ஒரு சடங்கு செய்யப்படும். அது ‘சிலம்பு கழி நோன்பு’ எனப்படும். உள்ளுறை - இரா. இராகவையங்கார் உரை - அழுவத்தில் காலில் கழலும் சிலம்பும் ஒலிக்கப் புகும் இந்நல்லோரைக் கண்டு கலங்கி அறிவில்லாத வாகை வெண்ணெற்று ஒலித்தல், சாடுவாற் கொள்ள வைத்தது கண்டோர் இரக்கம் புலப்பட என்பது. ஏகாரங்கள், தாம் - அசை நிலைகள். வாகை நெற்று ஒலித்தல்: குறுந்தொகை 7 - ஆரியர் கயிறாடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும், குறுந்தொகை 369 - அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம், அகநானூறு 45 - உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடு களப் பறையின் அரிப்பன ஒலிப்ப, அகநானூறு 151 - உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் அரிக் கோல் பறையின் ஐயென ஒலிக்கும். அழுவம் (7) - உ. வே. சாமிநாதையர் உரை - பாலைப் பரப்பு, பொ. வே. சோமசுந்தரனார் உரை - பாலை நிலம், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - காட்டு நிலத்தின் பரப்பு. முன்னியோரே(7) - உ. வே. சாமிநாதையர் உரை - கடந்து செல்ல நினைந்து வருபவர்களில், பொ. வே. சோமசுந்தரனார் உரை - செல்லக் கருதிச் செல்லா நிற்போர் (செல்லா நிற்போர் - செல்லுபவர்கள்), தமிழண்ணல் உரை - பிறர் அறியாமல் இவ்வழியைத் தேடி நடப்பவர்கள், முன்னுதல் - திட்டமிட்டு செல்லுதல். வரலாறு: ஆரியர்.

சொற்பொருள்:

வில்லோன் - வில்லை உடையவன், காலன கழல் - கால்களில் கழல் உள்ளது, ஏ - அசை, தொடியோள் - வளையல் அணிந்தவள், மெல்லடி - சிறிய அடி, மேலவும் - அவற்றின் மேல், சிலம்பு - சலங்கை, ஏ - அசை, கொலுசு, நல்லோர் - நல்ல மக்கள், யார் கொல் - யார் இவர்கள் (கொல் - ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல்), அளியர் - பரிதாபத்திற்கு உரியவர்கள், ஆரியர் - ஆரியர்கள், கயிறாடு - கயிற்றின் மேல் ஆடுதல், பறையின் - கொட்டப்படும் பறையைப் போல் (இன் உருபு ஒப்புப் பொருளது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கால் பொர - காற்று வீசுவதனால், கலங்கி - நடுங்கி, வாகை - உழிஞ்சில், வெண் நெற்று ஒலிக்கும் - வெள்ளை விதைக் கூடு ஒலிக்கும், வேய் பயில் - மூங்கில் நிறைந்த, அழுவம் - பரப்பு, இங்கு அது பாலை நிலத்தை உணர்த்துகின்றது, முன்னியோர் - கடந்து செல்ல வருபவர்கள்