குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 128

நெய்தல் - தலைவன் கூற்று


நெய்தல் - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் தலைவியைக் குறியிடத்திற் காணாது மீளும் பொழுது நெஞ்சை நோக்கி, “இனி தலைவி காண்டற் கரியள்; நீ துன்புறற்குரியை” என்று கூறியது.

குணகடல் திரையது பறை தபு நாரை
திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை
அயிரை ஆர் இரைக்கு அணவந்தாஅங்குச்
சேயல் அரியோட் படர்தி;
நோயை - நெஞ்சே! - நோய்ப் பாலோயே . . . . [05]
- பரணர்.

பொருளுரை:

நெஞ்சே! கீழ் கடல் அலைக்கு அருகிலுள்ளதாகிய முதுமையால் சிறகுகள் நீங்கப்பெற்ற நாரை திண்மையாகிய தேரையுடைய சேரனது மேல்கடற் கரையிலமைந்த தொண்டி யென்னும் பட்டினத்தின் கடற்றுறையின் முன் உள்ள அயிரை மீனாகிய பெறற்கரிய உணவைப் பெறும்பொருட்டு தலையை மேலே எடுத்தாற்போல நெடுந்தூரத்திலுள்ளவளும் பெறற்கரியவளுமாகிய தலைவியை பெறுவதற்கு நினைந்தாய்; நீ வருத்தத்தையுடையை துன்பத்துக்குக் காரணமாகிய ஊழ்வினையையுடையை.

முடிபு:

நெஞ்சே, அரியோட் படர்தி; நோயை; நோய்ப்பாலோய்.

கருத்து:

இனித் தலைவி நாம் பெறற்கரியள்.