குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 303

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

“தலைவி வேறுபாடு மிக்கனள்; ஆதலின் தாய் இற்செறிக்கக்கருதினாள்; இனி இவளை மணந்துகோடலே தக்கது” என்று தோழி தலைவனுக்கு உரைத்தது.

கழிதேர்ந்து அசைஇய கருங்கால் வெண் குருகு
அடைகரைத் தாழைக் குழீஇ, பெருங்கடல்
உடைதிரை ஒலியின் துஞ்சும் துறைவ!
தொல் நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்குப்
பசந்தனள் மன் என் தோழி - என்னொடும் . . . . [05]

இன் இணர்ப் புன்னை அம் புகர் நிழல்
பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே.
- அம்மூவனார்.

பொருளுரை:

மீனுணவின் பொருட்டுக் கழியின் நீரை ஆராய்ந்து உணவுண்டு தங்கிய கரிய காலையுடைய வெள்ளிய நாரைகள் அடைகரையிலுள்ள தாழையினிடத்து கூடி பெரிய கடலில் கரையை மோதி உடைகின்ற அலையின் ஓசையினால் துயில்கின்ற துறையையுடைய தலைவ என்னொடு! மின்னுகின்ற பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தினது அழகிய புள்ளியையுடைய நிழலில் பொன் போன்ற கோடுகளையுடைய நண்டுகளை அலைத்து விளையாடிய போதே என் தோழியாகிய தலைவி தம் பழைய செறிந்த நிலையினின்றும் நெகிழ்ந்த வளைகளையுடையளாகி இங்கே மிகப் பசந்தாள்.

முடிபு:

துறைவ, என் தோழி அலவன் ஆட்டிய ஞான்றே நெகிழ்ந்த வளையல்; ஈங்குப் பசந்தனள் மன்.

கருத்து:

இனித் தலைவியை மணத்தலே ஏற்புடையது.