குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 310

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தன்னை வற்புறுத்திய தோழியின்பாற் சினமுற்று, “என் நிலையைத் தலைவருக்கு உரைப்பாருளராயின் என் உயிர் உளதாகும்” என்று கூறியது.

புள்ளும் புலம்பின; பூவும் கூம்பின;
கானலும் புலம்பு நனி உடைத்தே; வானமும்,
நம்மே போலும் மம்மர்த்து ஆகி,
எல்லை கழியப் புல்லென்றன்றே;
இன்னும் உளெனே - தோழி! - இந் நிலை . . . . [05]

தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே.
- பெருங்கண்ணனார்.

பொருளுரை:

பறவைகள் தனிமையை நாடிவிட்டன! மலர்கள் இதழ்களை மூடி விட்டன! கடற்கரைச் சோலையும் தனிமையில் வாடுகின்றது! வானமும் நம்மைப் போல் கலங்கி நிற்கின்றது! வெளிச்சம் போய்ப் பொலிவின்றி உள்ளது இந்த நேரம்! அழகிய புலிநகக் கொன்றை மரங்களையுடைய குளிர்ச்சிப் பொருந்திய துறையை உடைய தலைவனுக்கு என்னுடைய நிலைமையைப் பற்றி யாராவது கூறினால், நான் இன்னும் உயிரோடு வாழ்வேன், தோழி.

முடிபு:

தோழி, புலம்பின; கூம்பின; உடைத்து; புல்லென்றன்று; துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறின் இன்னும் உளென்.

கருத்து:

யாரேனும் என் துயர்நிலையைத் தலைவனுக்கு உரைப்பாராயின் நன்றாம்.

குறிப்பு:

புல்லென்றன்றே - ஏகாரம் அசை நிலை, பெறினே: ஏகாரம் அசை நிலை. பொ. வே. சோமசுந்தரனார் உரை - தன் நிலையை அறிந்து ஆவன செய்யாது, தோழி வாளா இடித்துரைப்பாளாதல் பயனின்று என்பாள். தண்ணந்துறைவர் - தண்டுறைவர் என்பது தண்ணந்துறைவர் ஆவது, அம் - சாரியை, விரிக்கும் வழி விரித்தல்.

சொற்பொருள்:

புள்ளும் புலம்பின - பறவைகள் தனிமையை நாடின - புலம்பல் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் - தனிமை, வருந்துதல், பூவும் கூம்பின - மலர்கள் இதழ்களை மூடி விட்டன, கானலும் புலம்பு நனி உடைத்தே - கடற்கரைச் சோலையும் தனிமையில் வாடுகின்றது, வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி - வானமும் நம்மைப் போல் கலங்கி நிற்கின்றது, எல்லை கழியப் புல்லென் றன்றே - வெளிச்சம் போய் பொலிவின்றி உள்ளது, இன்னும் உளெனே தோழி - நான் இன்னும் உயிரோடு வாழ்வேன் தோழி, இந்நிலை - இந்தச் சூழ்நிலை, தண்ணிய கமழும் ஞாழல் - அழகிய/குளிர்ச்சிப் பொருந்திய நறுமணமான ஞாழல்/புலிநகக்கொன்றை, தண்ணந் துறைவர்க்கு - அழகிய துறைத் தலைவனுக்கு, உரைக்குநர்ப் பெறினே - கூறுவாரைப் பெற்றால்