குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 284

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த காலத்தில், ஊரினர் அலரை அஞ்சிய தலைவியை நோக்கி, "இவ்வூரினர் அறிவிலர் போலும்!" என்று தோழி கூறியது.

பொருத யானைப் புகர் முகம் கடுப்ப,
மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன்
ஒண் செங் காந்தள் அவிழும் நாடன்
அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,
நம் ஏசுவரோ? தம் இலர்கொல்லோ? . . . . [05]

வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி
கொன் நிலைக் குரம்பையின் இழிதரும்
இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே.
- மிளைவேள் தித்தனார்.

பொருளுரை:

போர் செய்த யானையினது புள்ளியை உடைய முகத்தை ஒப்ப மன்றத்தின்கண் உள்ள பொற்றைக் கல்லின்மேல் ஒள்ளிய செங்காந்தள் மலர் பல ஒருங்கே மலர்கின்ற நாட்டை உடைய தலைவன் வாய்மையை உடையனாயினும் வாய்மையனல்லனாயினும் மலையினிடத்திலே தாழ்ந்து வீழ்கின்ற தூய வெள்ளிய அருவி யானது அச்சத்தைத் தரும் இலையால் வேய்ந்த குடிலின் அருகில் இறங்கி ஓடும் நமக்கு இன்னாதாகி இருந்த இச்சிற்றூர் இடத்திலுள்ளார் தலைவன் அங்ஙனம் இருத்தல் கருதி நம்மைப் பழிப்பார்களோ? அவர் தமக்கென்று ஓர் அறிவும் இல்லாதவர்களோ?

முடிபு:

நாடன் அறவனாயினும், அல்லனாயினும், இச்சிறு குடியோர் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ?

கருத்து:

தலைவன் செயல் பற்றி நம்மை ஏசுவோர் அறிவில்லாதவர்.