குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 099

முல்லை - தலைவன் கூற்று


முல்லை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

பொருள்வயிற் பிரிந்த தலைவன் பொருளீட்டி மீண்டு வந்த காலத்து “நீர் பிரிந்தவிடத்து எம்மை நினைத்தீரோ?” என்று வினாவிய தோழிக்கு, “நான் எப்பொழுதும் நினைத்திருந்தேன்” என்று அவன் கூறியது.

உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லெனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லெனோ உலகத்து பண்பே
நீடிய மரத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உண சென்றற்று ஆஅங்கு . . . . [05]

அனை பெரு காமம் ஈண்டு கடைக்கொளவே.
- அவ்வையார்.

பொருளுரை:

உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டுப் பெருகும் மிக்க வெள்ளம் பிறகு கையால் இறைத்துண்ணும் அளவு சிறுகிச் சென்று அற்றது போல வெள்ளத்தைப் போன்ற அவ்வளவு பெரிய காம நோய் இங்கே யான் வருதலால் முடிவடையும்படி யான் ஆழ்ந்து எண்ணினேனல்லேனோ? அங்ஙனம் எண்ணி மீட்டும் மீட்டும் மிகநினைவு கூர்ந்தேனல் லேனோ? அங்ஙனம் நினைவு கூர்ந்து என் நினைவு நிறைவேறுதற்கு மாறாக இருக்கும் உலகத்தியல்பை எண்ணி மயங்கினேன் அல்லேனோ?

முடிபு:

காமம் கடைக்கொள யான் உள்ளினென் அல்லெனோ? நினைத்தனென் அல்லெனோ? மருண்டனென் அல்லெனோ?

கருத்து:

யான் எப்பொழுதும் உங்களை நினைத்திருந்தேன்.