குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 248

நெய்தல் - தோழி கூற்று


நெய்தல் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைவியை நோக்கி, "வெறியாட்டு அயர்ந்து தாய் தலைவனை அறிந்து, வரைவுக்கு உரியவற்றைச் செய்கின்றாளாதலின் வரைவுண்டாதல் ஒருதலை; அதற்குரிய நாளும் அணிமையில் உள்ளது; ஆதலின் நீ ஆற்றா யாதல் நன்றன்று" என்று தோழி கூறியது.

அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்கு ஆகின்றே - தோழி! - கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை . . . . [05]

குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.
- உலோச்சனார்.

பொருளுரை:

தோழி! கடற்கரைச் சோலையின் இடத்திலுள்ள அசைந்த அடியிடம் புதையும்படி மேல்காற்றுக் கொணர்ந்து இட்ட அடும்பங் கொடி படர்ந்த மணற் குவியல் பரவ நெடிய பனை மரங்கள் குறியனவாகும் கடற்றுறையை உடைய தலைவனை முருகன் என்று சொல்லி வெறியெடுத்து நம் தாய் அறிந்து கொண்டாள்; ஆதலின் வரைவுக்குரிய நாள் வாராமை அரிதாகும்; வரைவு நேரும்; அவனது மார்பை அடைக என்று வரையறுத்த நாள் அணிமையாக வந்தும் இவ்வண்ணம் நின்பால் ஆற்றாமை உண்டாகின்றது; இஃது என் கொல்?

முடிபு:

தோழி, துறைவனை யாய் கூறி அறிந்தனள்; அது வரலன்மை அரிது; குறுகி ஈங்காகின்று.

கருத்து:

வரைவு அணிமையில் நிகழ்வதாதலின் நீ ஆற்றாது இருத்தல் நன்றன்று.