குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 083

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

வரைவுக்குரிய முயற்சிகளோடு வந்த தலைவனைச் செவிலி ஏற்றுக் கொண்டமையைத் தோழி அச்செவிலியை வாழ்த்தும் வாயிலாகத் தலைவிக்கு உணர்த்தியது.

அரு பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக
பெரு பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீ பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே . . . . [05]
- வெண்பூதனார்.

பொருளுரை:

தமது வீட்டின்கண் இருந்து தமது முயற்சியால் ஈட்டிய பொருளில் தம் கூற்றை உண்டாற் போன்ற இன்சுவையைத் தருவனவாகி கொம்பு தோறும் இனிய பழங்கள் தொங்குகின்ற பலாமரங்களையுடைய உயர்ந்த மலைகளுள்ள நாட்டுக்குத் தலைவனை வரைதற்குரிய பொருளோடு வருவானென்று கூறியவளாகிய அன்னை! பெறுதற்கரிய அமிழ்தமே உண்ணும் உணவாக பெரும்புகழுடைய சுவர்க்கத்தை பெறுவாளாக.

முடிபு:

நாடனை வருமென்றோளாகிய அன்னை, பெரும் பெயருலகம் பெறீஇயர்.

கருத்து:

தலைவர் வருவாரென்று உணர்த்திய செவிலி வாழ்வாளாக.