குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 207

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது, “இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.

'செப்பினம் செலினே செலவு அரிது ஆகும்' என்று,
அத்த ஓமை அம் கவட்டு இருந்த
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி
சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும்
கல்வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி . . . . [05]

நல் அடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே.
- உறையனார்.

பொருளுரை:

நம்முடைய செலவைத் தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின் செல்லுதல் அரிதாகும் என்று கூறி பாலை நிலத்திலுள்ள ஓமை மரத்தினது அழகிய கிளையின்கண் இருந்த இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது தனிமையைப் புலப்படுத்தலைக் கொண்ட தெளிந்த ஓசை அருவழியிற் செல்லும் மனிதர்களுக்கு உசாத்துணையாக அமைதற்கு இடமாகிய கற்களையுடைய மலையினது அயலதாகிய யாவரும் நடக்கும் பழையதாகிய சிறியவழியில் தம் நல்ல அடிகள் சுவடு செய்ய தாவி சென்றாரென்று கேட்ட நம்முடைய அன்பர் பலராவர்.

முடிபு:

என்று சென்றெனக் கேட்ட ஆர்வலர் பலர்.

கருத்து:

தலைவர் செலவை யான் முன்னரே அறிந்தேன்.