குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 384

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையரிடத்திருந்து வந்த தலைவனை நோக்கி, “நின்சூள் பொய்யுடைத்து” என்றுகூறித் தோழி வாயில் மறுத்தது.

உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம - மகிழ்ந! - நின் சூளே.
- ஓரம்போகியார்.

பொருளுரை:

தலைவ உழுத்தங்காயை அடித்தற்கு உரிய கழுந்துள்ள தடியைப்போல உள்ள கரும்பெழுதிய தொய்யிலையுடைய பருத்த தோளையும் நெடிய பலவாகிய கூந்தலையும் குறிய வளைகளையும் உடைய பரத்தையரது பெண்மைநலத்தை நுகர்ந்து துறந்துஈண்டு வருவாயாயின் நீ அவர் மாட்டுச் செய்தசூள் மிக நன்றாக இருந்தது!

முடிபு:

மகிழ்ந, மகளிர் நலன் உண்டு துறத்தியாயின், நின்சூள் மிகநன்று!.

கருத்து:

நின்மொழியை மெய்யென்று எண்ணி மயங்கேம்.