குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 178

மருதம் - தோழி கூற்று


மருதம் - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனும் தலைவியும் வாழும் மனைக்கு அவர்களோடு சென்றதோழி தலைவியை அளவளாவுதலில் தலைவனுக்கு இருக்கும் விரைவைக் கண்டு, "இக் காலத்தில் இப்படி இருப்பீராகிய நீர் களவுக்காலத்தில் தலைவியோடு அளவளாவ வேண்டுமென்ற நும் விரைவை வெளிப்படாமற் செய்து வருந்தினீர் போலும்" என்று கூறி இரங்கியது.

அயிரை பரந்த அந்தண் பழனத்
தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள்
இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர்
தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் . . . . [05]

கரிய மாகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.
- நெடும்பல்லியத்தையார்.

பொருளுரை:

அயிரைமீன் மேய்தற்குப் பரந்த அழகிய தண்மையாகிய பொய்கையினிடத்து அழகை மேற்கொண்ட மலரையுடையனவாகிய உள்ளே துளையையுடைய திரண்ட தண்டையுடைய ஆம்பலைப் பறிப்போர் புனல்வேட்கையை அடைந்தாற் போல இத்தலைவியின் நகிலினிடையே துயிலப் பெற்றும் நடுங்குதலை யொழிந்தீர் அல்லீர்; யாம்! கன்னி மகளிரும் பிறரும் தொழுது காணும் பிறையைப்போல் தோன்றி நுமக்குக்காண்டற்கரியேமாகிய களவுக் காலத்தில் பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர்; யான் அதனை யறிந்து வருந்துவேன்.

முடிபு:

இவள் இடைமுலைக் கிடந்தும் நடுங்கல் ஆனீர்; யாம்நுமக்கு அரிய மாகிய காலைப் பெரிய நோன்றனிர்; யான் நோகு.

கருத்து:

நீர் தலைவிபாற் கொண்ட அன்பின் வன்மையை முன்புயான் நன்கறிந்திலேன்.