குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 049

நெய்தல் - தலைவி கூற்று


நெய்தல் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்த காலத்தில் முன்பு இருந்த ஆற்றாமை நீங்கி, அவனோடு கூடி மகிழ்ந்த தலைவி கூறியது.

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே . . . . [05]
- அம்மூவனார்.

பொருளுரை:

அணில் பல்லைப் போன்ற முள்ளையும், பூந்தாதையும் உடைய கழிமுள்ளிச் செடிகள் நிறைந்த நீலமணியின் நிறத்தை ஒத்த கடலினுடைய கரையின் தலைவனே! இந்தப் பிறவி முடிந்து அடுத்த பிறவி ஆனாலும் நீயே எனக்குக் கணவன் ஆகுக. நான் உன்னுடைய நெஞ்சுக்கு பொருந்துபவள் ஆகுக.

குறிப்பு:

கணவனை - ஐ சாரியை, நேர்பவளே: ஏகாரம் அசை நிலை. அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப (49) - உ. வே. சாமிநாதையர் உரை - அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய தாது முதிர்ந்த முள்ளிச் செடியையும் நீலமணியினது நிறத்தை ஒத்த கரிய நீரையையுமுடைய கடற்கரையை உடைய தலைவ, இரா. இராகவையங்கார் உரை - அணிலின் பல்லை ஒத்த முள்ளையுடைய முண்டக மலர்களில் மணிநிறமுள்ள காரன்னங்கள் (கறுப்பு அன்னங்கள்) மாட்சிமைப்படுகின்ற நீர்க்கடற் சேர்ப்ப.

சொற்பொருள்:

அணில் பல் அன்ன - அணிலின் பல்லைப் போன்று, கொங்கு முதிர் - தாது நிறைந்த, முண்டகத்து - கழிமுள்ளி செடியின், மணி - நீல மணி, கேழ் - கருமை, அன்ன - போல், மாநீர் - கடல், சேர்ப்ப - நெய்தல் நிலத் தலைவனே, இம்மை - இந்தப் பிறவி, மாறி - மாறி, மறுமையாயினும் - மறு பிறவி ஆனாலும், நீ ஆகியர் என் கணவனை - நீயே என் கணவன் ஆகுக, யான் ஆகியர் - நான் ஆகுக, நின் நெஞ்சு - உன்னுடைய நெஞ்சுக்கு, நேர்பவளே - ஒத்தவள்