குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 261

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

இரவுக் குறிக்கண் வந்த தலைமகன் சிறைப்புறத்தே இருப்ப அதனை அறிந்த தலைவி தோழிக்குச் சொல்வாளாகி, "தலைவரது வரவை எதிர்நோக்கி வருந்தி இரவெல்லாம் துயின்றிலேன்" என்று கூறி, விரைவில் வரைந்து கோடலே நன்றென்பதைப் புலப்படுத்தியது.

பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென் யாமத்து, 'ஐ' எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண் . . . . [05]

துஞ்சா வாழி - தோழி! - காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.
- கழார்க் கீரனெயிற்றியார்.

பொருளுரை:

தோழி! நாழிகைக் கணக்கர் இரவில் காலக் கணக்கை ஆராயும் திறத்தைப் போல ஆராய்ந்து வருந்தி நெஞ்சம் புண்பட்ட துன்பம் காரணமாக பழைய மழை பொழிந்ததாக செவ்வி அழிந்து ஒழுகிய உள்ளீடு இல்லாத ஊமைக் காயை உடைய எட் பயிரை உடைய சிறிய மழையை உடைய கார்ப் பருவத்தின் இறுதி நாட்களில் சேற்றின்கண் நிற்றலை வெறுத்த சிவந்த கண்ணை உடைய எருமை இருள் செறிந்த நடு இரவின் கண் ஐயென்று ஒலிக்கும் அச்சம் உண்டாகின்ற காலத்திலும் என்னுடைய கண்கள் தூங்காவாயின.

முடிபு:

தோழி, வருந்தி உற்ற விழுமத்தான் பொழுதினானும் என்கண் துஞ்சா.

கருத்து:

தலைவனது வருகையை நோக்கி நான் இரவில் துயிலாதுஇருந்தேன்.