குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 229

பாலை - கண்டோர் கூற்று


பாலை - கண்டோர் கூற்று

பாடல் பின்னணி:

தலைவனையும் தலைவியையும் முன்பு அறிந்தோர், சுரத்தில் அவர்களைக் கண்டபின் தம்முள் கூறியது.

இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ,
நல்லை மன்ற அம்ம, பாலே! மெல் இயல் . . . . [05]

துணை மலர்ப் பிணையல் அன்ன, இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
- மோதாசானார்.

பொருளுரை:

இவன் இவளுடைய ஐந்துப் பகுதியாக உள்ள கூந்தலைப் பிடித்து இழுப்பான். இவள் இவனுடைய குறைந்த தலை மயிரை வளைத்து இழுத்து விட்டு ஓடுவாள். இவர்களுடைய அன்பான செவிலித் தாய்மார்கள் அதைத் தடுக்க முயற்சித்தாலும், தொடர்ந்து இவர்கள் அயலார் போலச் சிறு சண்டைகளைச் செய்வார்கள். ஊழ்வினையே! நீ உறுதியாக நல்ல காரியம் செய்தாய். மலர்களை சேர்த்துக் கட்டிய இரட்டை மாலையைப் போல் இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கினாய்.

குறிப்பு:

அம்ம (5) - உ. வே. சாமிநாதையர் உரை - வியப்பு இடைச்சொல், பொ. வே. சோமசுந்தரனார் உரை - கேட்பித்தற் பொருட்டு. மன்றம்ம (5) - உ. வே. சாமிநாதையர் உரை - மன்ற அம்ம என்பது மன்றம்ம என வந்தது. விகாரம். மன்ற - மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). மன் - கழிவே, ஆக்கம், ஒழியிசைக் கிளவி, என்று அம் மூன்று என்ப மன்னைச் சொல்லே (தொல்காப்பியம், இடையியல் 4).

சொற்பொருள்:

இவன் இவள் ஐம்பால் பற்றவும் - இவன் இவளுடைய ஐந்துப் பகுதியாக உள்ள கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவன் புன்தலை ஓரி வாங்குநள் - இவள் இவனுடைய புல்லிய தலை மயிரை வளைத்து இழுப்பாளாக, பரியவும் - ஓடவும், காதல் செவிலியர் தவிர்ப்பவும் - அன்பான செவிலித் தாயார் தடுக்கவும், தவிராது - நிறுத்தாமல், ஏதில் சிறு செரு உறுப - அயன்மையையுடைய சிறு சண்டைகளைச் செய்வார்கள், மன் - கழிவுக்குறிப்பு, ஓ - அசை நிலை, நல்லை மன்ற - உறுதியாக நல்லது, அம்ம - வியப்பு இடைச்சொல், பாலே - ஊழ் வினையே, மெல் இயல் - மென்மையான, துணை மலர்ப் பிணையல் அன்ன - மலர்களை சேர்த்துக் கட்டிய இரட்டை மாலையைப் போல் அல்லது இரண்டிரண்டு மலர்களால் இணைத்துக் கட்டிய ஒரு மாலையைப் போன்று, இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே - இவர்கள் மணம் புரிந்து மகிழும் இயல்பை உண்டாக்கினாய்