குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 366

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

காப்பு மிக்கதனால் வேறுபட்ட தலைவியின் நிலைகண்டு, “இஃது எக்காரணத்தால் உண்டாகியது?” என்று வினவிய செவிலிக்குத் தோழி பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நின்றது.

பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு, . . . . [05]

ஒழுகி கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.
- பேரிசாத்தனார்.

பொருளுரை:

இந்த ஆய்ந்த அணிகலன்களை அணிந்த தலைவி வெறி யாடும் மகள் இந்நோய் முருகனாலாயது என்று சொல்லவும் அமைதி பெறாளாய் அதன் மேலும் பசிய இடத்தையுடைய கரிய சுனையினிடத்தே பல கட்டு அவிழ்ந்த வளவிய இதழையுடைய நீலமலரைப் பார்த்து நெஞ்சுள்ளே வருந்தி அழுத கண்களையுடையவளாகி துணிந்தது குற்றமற்றது; பழவினையினாலே வரையறுத்துப் பொருத்தப் பட்டதன்றி அத்தலைவர் திறத்தில் தகுதியை வரையறுத்து அறிவதற்கு யாம் எத்தகுதியை உடையேம்?

முடிபு:

இவ்வாயிழை அமையாள், நீலம் நோக்கி அழுதகண்ணளாகித் துணிவு பழுதன்று.

கருத்து:

தலைவிக்கு நீலப்பூவைத் தந்து நட்புச்செய்த அன்பன் ஒருவன் உளன்.