குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 075

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது வரவைப் பாணனால் அறிந்த தலைவி, "நீ பாடலிபுத்திர நகரைப் பெறுவாயாக" என்று வாழ்த்தியது.

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்!
பொன் மலி பாடலி பெறீஇயர்!
யார் வாய்க் கேட்டனை, காதலர் வரவே? . . . . [05]
- படுமரத்து மோசிகீரனார்.

பொருளுரை:

நீ கண்டாயா? கண்டவர்கள் சொல்வதைக் கேட்டாயா? தெளிவாகக் கூறு! உண்மையாகிய ஒன்றை நான் அறிய விரும்புகின்றேன். வெள்ளைத் தந்தங்களுடைய யானைகள் விளையாடும் சோணை நதியையுடைய, பொன் நிறைந்த பாடலி நகரை நீ பெறுவாயாக. என் காதலர் வரவை யார் சொல்லக் கேட்டாய்?

குறிப்பு:

அகநானூறு 265 - பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் சீர் மிகு பாடலி. யானை சோணை படியும் (3) - உ. வே. சாமிநாதையர் உரை - சோணை ஆற்றில் துளைந்து விளையாடும், பொ. வே. சோமசுந்தரனார் உரை - சோணை ஆற்றில் நீராடும். மொழிமோ: மோ முன்னிலையசை, வரவே - ஏகாரம், அசை நிலை. பாடலி (4) - அகநானூறு 265 - சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியம் கொல்லோ?

சொற்பொருள்:

நீ கண்டனையோ - நீ கண்டாயா?, கண்டார்க் கேட்டனையோ - (அல்லது) கண்டவர் சொன்னதைக் கேட்டாயா?, ஒன்று - ஒன்றை, தெளிய - தெளிவாக, நசையினம் - விரும்புகின்றேன், மொழிமோ - கூறுவாயாக, வெண்கோட்டு - வெள்ளைத் தந்தம், யானை - யானை, சோணை படியும் - சோணை நதியில் விளையாடும், பொன்மலி - பொன் நிறைந்த, பாடலி - பாடலி நகரம், பெறீஇயர் - நீ பெறுவாயாக (இயர் வியங்கோள் வினைமுற்று விகுதி, வாழ்த்துப்பொருளில் வந்தது, சொல்லிசை அளபெடை), யார்வாய்க் கேட்டனை - யார் சொல்லக் கேட்டாய், காதலர் வரவே - என்னுடைய காதலரின் வரவை