குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 022

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை தோழி ஆற்றுவித்தாள்.

நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய,
யாரோ பிரிகிற்பவரே? சாரல்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அம் சினை கமழும்
தேம் ஊர் ஒண்ணுதல் நின்னொடுஞ்செலவே . . . . [05]
- சேரமானெந்தை.

பொருளுரை:

மலைப்பக்கத்திற்கு அழகு தரும், இதழ்கள் வலதுபுறம் சுரிந்த, கடம்ப மரத்தின் வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையில் உள்ள மலர்களின் நறுமணம் போன்ற, நறுமணம் பரவிய ஒளியுடைய நெற்றியுடையவளே! தலைவர் பிரிவார் எனக் கருதி நீ கண்ணீர் வடிக்கின்றாய். நீ இங்கே தனியாக வருந்துமாறு உன்னை விட்டு யார் தான் பிரிவார்? தலைவர் உன்னுடன் தான் செல்லுவார்.

குறிப்பு:

தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை தோழி ஆற்றுவித்தாள். பிரிகிற்பவரே (2) - உ. வே. சாமிநாதையர் உரை - நின்னைப் பிரிந்து செல்லும் ஆற்றலையுடையவர், பிரியச் சம்மதிப்போர் எனலுமாம். தேம் ஊர் ஒண்ணுதல் (5) - உ. வே. சாமிநாதையர் உரை - நன்மணம் பரவிய விளக்கத்தையுடையாய், பொ. வே. சோமசுந்தரனார் உரை - வண்டுகள் ஊர்தரும் ஒளியுடைய நுதலினையுடையாய். ஊரும் என்ற வினையால் வண்டு எனலே நன்று. வலஞ்சுரி மராஅம் - அகநானூறு 83 - வலஞ்சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீ, ஐங்குறுநூறு 348 - வலஞ்சுரி மராஅம் வேய்ந்து நம் மணங்கமழ் தண் பொழில், ஐங்குறுநூறு 383 - நெடுங்கால் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வலஞ்சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற, குறுந்தொகை 22 - சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும். பிரிகிற்பவரே - ஏகாரம் அசை நிலை, கண்ணை - குறிப்பு முற்றெச்சம், மராம் - ஆகுபெயர் பூவிற்கு, தேம் தேன் என்றதன் திரிபு, ஒண்ணுதல் - அன்மொழித்தொகை, செலவே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

நீர் வார் கண்ணை - கண்ணீர் வடிக்கும் கண்களையுடையை, நீ இவண் ஒழிய - நீ இங்கே தனியாக இருக்க, யாரோ பிரிகிற்பவரே - உன்னை விட்டு யார் தான் பிரிவார், சாரல் சிலம்பணி கொண்ட - மலைப்பக்கத்தில் அழகு கொண்ட, வலஞ்சுரி மராஅத்து - வலைப்பக்கத்தே இதழ்கள் சுரிந்த கடம்ப மரத்தின் மலர்கள், வேனில் அம் சினை - வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளை, கமழும் தேம் ஊர் - நறுமணம் பரவிய, தேன் வண்டுகள் மொய்க்கும், ஒண்ணுதல் - ஒளியுடைய நெற்றியுடையவளே, நின்னொடுஞ்செலவே - உன்னுடன் செல்லுவார்