குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 189

பாலை - தலைவன் கூற்று


பாலை - தலைவன் கூற்று

பாடல் பின்னணி:

வேந்தனது வினைமேற் செல்லாநின்ற தலைவன் தன் பாகனைநோக்கி, “இன்று விரைந்து சென்று வினைமுடித்து, நாளைத் தலைவிபால் மீண்டு வருவேமாக” என்று கூறியது.

இன்றே சென்று வருதும்; நாளைக்
குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக,
இளம் பிறை அன்ன விளங்கு சுடர் நேமி
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப,
கால் இயல் செலவின், மாலை எய்தி . . . . [05]

சில் நிரை வால் வளைக் குறுமகள்
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே.
- மதுரை ஈழத்துப் பூதன்தேவனார்.

பொருளுரை:

பாக! இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய் நாளை மீண்டு வருவேமாக. குன்றினின்று வீழும் அருவியைப் போல யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்து செல்ல இளம்பிறையைப் போன்ற விளங்குகின்ற ஒளியையுடைய அத்தேரினது சக்கரம் வானத்தினின்றும் வீழ்கின்ற கொள்ளியைப் போல பசிய பயிர்களைத் துணிப்ப காற்றைப் போன்ற இயல்பையுடைய வேகத்தினால் மாலைக் காலத்தில் தலைவியிருக்கு மிடத்தையடைந்து சிலவாகிய வரிசையையுடைய வெள்ளிய வளைகளை யணிந்த அவளது பலவாக மாட்சிமைப் பட்ட மேனியை மணந்து உவப்போம்.

முடிபு:

இன்றே சென்று நாளை வருவது. தேர் முடுக, நேமிதுமிப்ப,மாலை எய்திக் குறுமகள் ஆகம் மணந்து உவக்குவம்.

கருத்து:

இன்று சென்று வினைமுடித்து விட்டுத் தலைவியின்பால் நாளை மாலையில் வந்து எய்துவோமாக.