குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 224

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் பிரிந்த காலத்து, “இவள் இறந்து படுவாளோ!” என்று கவலையுற்ற தோழிக்கு முன்னிலைப் புறமொழியாக, “தலைவரைப் பிரிந்த துயரினும் இவள் வருந்துதலைக் காணுந்துயர் பெரிதாயிற்று” என்று தலைவி கூறியது.

கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே, கூவல்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத் . . . . [05]

துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே.
- கூவன் மைந்தனார்.

பொருளுரை:

கிணற்றின் கண்ணே வீழ்ந்த குராற்பசு படும் துன்பத்தை இராக்காலத்தில் கண்ட ஊமையாக இருப்பவன் அத்துயரத்தை வெளியிட முடியாமல் துன்புற்றது போல என் பொருட்டுத் தோழி படும் வருத்தத்தினால் துயரைப் பொறுக்கும் ஆற்றல் இல்லேனாயினேன்; அத்துயரம் கவர்த்த வழிகளில் யாமரங்களை உடைய துன்பத்தை உடைய நீண்டவழிகளில் எம்மைப் பிரிந்துசென்ற தலைவரது கொடுமையை நினைந்து துயிலாமல் இருக்கும் துன்பத்தைக் காட்டிலும் மிக்க துன்பமாகின்றது.

முடிபு:

தோழி நோய்க்குத் துயர் பொறுக்கல்லேன்; துஞ்சா நோயினும் நோயாகின்று.

கருத்து:

தோழி வருந்துதல் பயனற்றது.