குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 319

முல்லை - தலைவி கூற்று


முல்லை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்தது கண்ட தலைவி வேறுபட்டாளாக, "நீ ஆற்ற வேண்டும்’’ என்று வற்புறுத்திய தோழியை நோக்கி, "நான் எங்ஙனம் ஆற்றுவேன்? என் உயிர் நில்லாது போலும்" என்று தலைவி கூறியது.

மான் ஏறு மடப் பிணை தழீஇ, மருள் கூர்ந்து,
கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்,
கையுடை நல் மாப் பிடியொடு பொருந்தி,
மை அணி மருங்கின் மலையகம் சேரவும்,
மாலை வந்தன்று, மாரி மா மழை; . . . . [05]

பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர்
இன்னும் வாரார் ஆயின்,
என் ஆம், தோழி நம் இன் உயிர்நிலையே.
- தாயங் கண்ணனார்.

பொருளுரை:

ஆண் மான்கள் மடப்பம் பொருந்திய தங்கள் பெண் மான்களைத் தழுவி, மயக்கம் மிகுந்து, காட்டில் உள்ள, புதரில் மறைந்து ஒடுங்கியிருக்கவும், தும்பிக்கையையுடைய நல்ல ஆண் யானைகள் தங்கள் பெண் யானைகளுடன் சேர்ந்து முகில்கள் அணிந்த பக்கங்களையுடைய மலையில் அடையவும்படியும், மாலையில் வந்தது கார்காலத்தின் பெரிய மழை. என்னுடைய பொன்னை ஒத்த மேனியின் அழகைக் கெடுத்த என் தலைவர் இன்னும் வரவில்லை ஆனால், என் இனிய உயிரின் நிலை என்னவாகும் தோழி?

முடிபு:

தோழி, மானேறு ஒடுங்கவும், மா சேரவும், மழை வந்தன்று; சிதைத்தோர் வாராராயின் உயிர்நிலை என்னாம்?

கருத்து:

தலைவர் வாராவிடின் என் உயிர் நீங்கும்.

குறிப்பு:

நிலையே - ஏகாரம் அசை நிலை.

சொற்பொருள்:

மான் ஏறு மடப்பிணை தழீஇ - ஆண் மான்கள் மடப்பம் பொருந்திய தங்கள் பெண் மான்களைத் தழுவி (தழீஇ - அளபெடை), மருள் கூர்ந்து - மயக்கம் மிகுந்து, கானம் நண்ணிய - காட்டில் உள்ள, புதல் மறைந்து ஒடுங்கவும் - புதரில் மறைந்து ஒடுங்கியிருக்கவும், கை உடை நன்மாப் பிடியொடு பொருந்தி - தும்பிக்கையையுடைய நல்ல ஆண் யானைகள் தங்கள் பெண் யானைகளுடன் சேர்ந்து, மை அணி மருங்கின் மலையகம் சேரவும் - முகில்கள் அணிந்த பக்கங்களையுடைய மலையில் அடையவும், மாலை வந்தன்று மாரி மா மழை - மாலையில் வந்தது கார்காலத்தின் பெரிய மழை, பொன் ஏர் மேனி நன் நலம் சிதைத்தோர் - என்னுடைய பொன்னை ஒத்த மேனியின் அழகைக் கெடுத்தவர் (ஏர் - உவம உருபு), இன்னும் வாரார் ஆயின் - இன்னும் வரவில்லை ஆனால், என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே - என் இனிய உயிரின் நிலை என்னவாகும் தோழி