குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 364

மருதம் - இற்பரத்தைக் கூற்று


மருதம் - இற்பரத்தைக் கூற்று

பாடல் பின்னணி:

வேறொரு பரத்தை தன்னைப் புறங்கூறினாளெனக் கேட்ட இற்பரத்தை அப்பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப, “மகளிர் துணங்கை யாடும் நாளும், மள்ளர் சேரிப்போர் செய்யும் நாளும் வந்தன; இப்பொழுது தலைவன் வலிய என்பால் அன்பு கொள்ளுதலை அறியலாம்” என்று கூறியது.

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய்
வாளை நாள் இரை பெறூஉம் ஊரன்
பொன் கோல் அவிர் தொடித் தற் கெழு தகுவி
எற் புறங்கூறும் என்ப; தெற்றென்
வணங்கு இறைப் பணைத் தோள் எல் வளை மகளிர் . . . . [05]

துணங்கை நாளும் வந்தன அவ் வரைக்
கண் பொர, மற்று அதன்கண் அவர்
மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.
- அவ்வையார்.

பொருளுரை:

பிணக்கையுடைய கொடிப் பிரம்புகளைப் போன்ற கோடுகள் பொருந்திய புறத்தையுடைய நீர்நாயானது வாளை மீனாகிய நாட்காலை உணவைப் பெறுகின்ற ஊருக்குத் தலைவனுடைய பொன்னாலாகிய திரட்சியையுடைய விளங்குகின்ற வளையையணிந்த தனக்குப்பொருந்திய தகுதியுடைய பரத்தை என்னைப் புறங்கூறுவளென்று கூறுவர; அவள் கூறுவது உண்மையா அன்றா என்பது விளங்கும்படி வளைந்த சந்தையுடைய மூங்கிலைப் போன்ற தோள்களில் விளக்கத்தையுடைய வளையையணிந்த மகளிர்க்குரிய துணங்கைக் கூத்தாடும் நாட்களும் வந்தன; அக்காலத்தில் ஒருவர்கண் மற்றொருவர் கண்ணோடு மாறுபடும்படி அத்துணங்கைக் கூத்தினிடத்து அம்மகளிரது மணத்தைக் கொள்ளும் பொருட்டு மள்ளர்களுடைய சேரிப் போரானது விரும்பிக்கொள்ளப்படும்.

முடிபு:

ஊரன் தகுவி புறங்கூறுமென்ப; தெற்றென நாளும்வந்தன; அதன்கண் மள்ளர்போர் அவர் மணங்கொளற்கு இவரும்.

கருத்து:

என்னைத் தலைவனே விரும்பி அடைந்தான்.