குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 360

குறிஞ்சி - தலைவி கூற்று


குறிஞ்சி - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தாய் வெறியெடுக்க வெண்ணியதைக் கூறி அஞ்சிய தோழிக்கு, “தலைவன் இங்கே வாராதொழியின் நன்றாம்; அதனால் துன்பம் உண்டாயினும் பின் இனிதாக முடியும்” என்று தலைவி கூறியது.

வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்கதில்ல - தோழி! - சாரல்
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல் . . . . [05]

உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.
- மதுரை ஈழத்துப் பூதன்றேவனார்.

பொருளுரை:

தோழி! பொறுத்தற்கரிய நினைவாலுண்டாகும் துன்பத்தை இன்று நாம் அடைந்தாலும் எனது நோயைத் தீர்க்கும் வழி வெறியாடுதலென்று தெளிந்த வேலன் அந்நோயைத் தீர்ப்பதற்கு உரிய பரிகாரத்தை அறியாதவன் ஆதலை நம்தாய் காணும்பொருட்டு மலைச்சாரலின்கண் பெண்யானையின் கையையொத்த பெரிய கதிர்க் கொத்திலுள்ள தினையை உண்ணுகின்ற கிளிகளை ஓட்டும் குறமகளின் கையிலுள்ள குளிரென்னும் கருவி சிலம்பைப்போல ஒலிக்கின்ற சோலைகள் விளங்கும் மலைநாடனாகிய தலைவன் இராக்காலத்தே இங்கே வாராதொழிக; இஃது எனது விருப்பம்.

முடிபு:

தோழி, நாடன் இரவினான் வாரற்க.

கருத்து:

தலைவன் ஈண்டு வாராதொழிக.