குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 204

குறிஞ்சி - பாங்கன் கூற்று


குறிஞ்சி - பாங்கன் கூற்று

பாடல் பின்னணி:

#

“காமம், காமம்” என்ப, காமம்
அணங்கும் பிணியும் அன்றே, நினைப்பின்
முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல்
மூது ஆ தைவந்தாங்கு,
விருந்தே காமம், பெருந்தோளோயே . . . . [05]
- மிளைப்பெருங்கந்தனார்.

பொருளுரை:

பெரிய தோள்களை உடைய நண்பனே! “காமம் காமம்” என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள். காமம் வருத்தமும் நோயும் இல்லை. நினைக்கும் பொழுது, பழைய கொல்லையில் உள்ள மேட்டு நிலத்தில், முற்றாத இளைய புல்லை ஒரு முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற்போல், அக்காமம் புதிய இன்பத்தை உடையதாகும்.

குறிப்பு:

குறுந்தொகை 136 - மிளைப் பெருங்கந்தனார், குறிஞ்சித் திணை- தலைவன் தோழனிடம் சொன்னது, காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே. காமம் காமம் என்ப (1) - உ. வே. சாமிநாதையர் உரை - காமம் காமம் என்று அதனை அறியார் இகழ்ந்து கூறுவர், திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை - காமம் காமம் என்று உயர்த்திக் கூறுவர், தமிழண்ணல் உரை - காமம் காமம் என்று ஏதோ இழிவும் வெறுப்பும் தோன்றக் கூறுவார்கள், பொ. வே. சோமசுந்தரனார் உரை - காமநோய் காமநோய் என அதன் இயல்பு அறியார் அதற்கு அஞ்சி மெலிவர், இரா. இராகவையங்கார் உரை - தாழ்த்துச் சொல்ல வேண்டியது ஒன்றைக் காமம் காமம் என எடுத்துச் சொல்வர். அணங்கு (2) - உ. வே. சாமிநாதையர் உரை - வருத்தம், பொ. வே. சோமசுந்தரனார் உரை - தீண்டி வருத்தும் தெய்வம், தமிழண்ணல் - தெய்வம் வருத்துவது போல் தாக்கி மனத்துயரை உண்டாக்குவது. பெருந்தோளோயே (5) - பொ. வே. சோமசுந்தரனார் உரை - பெருந்தோளோய் என்றது அவன் ஆண்மையை நினைவூட்டி, நின் ஆண்மைக்கு தக மனவடக்கம் உடையை அல்ல என்று இகழ்ந்தவாறு என்க. உ. வே. சாமிநாதையர் உரை - அறிவுடையார்பால் காமம் தோன்றாது என்றும், அறிவின்றி மனத்தின் வழியே செல்வார்க்கு அது விருந்தாவது என்றும் புலப்படுத்தி இடித்துரைத்தான். பெருந்தோளோயே - ஏகாரம் அசை நிலை

சொற்பொருள்:

“காமம் காமம்” என்ப - “காமம் காமம்” என்று அதை அறியாதவர்கள் இகழ்ந்து கூறுவார்கள், காமம் அணங்கும் பிணியும் அன்றே - காமம் வருத்தமும் நோயும் இல்லை, தீண்டி வருத்தும் கடவுளும் இல்லை, நினைப்பின் - நினைக்கும்பொழுது, முதைச் சுவல் - பழைய கொல்லையில் உள்ள மேட்டு நிலத்தில், கலித்த முற்றா இளம் புல் - முற்றாத இளைய புல்லை, மூது ஆ தைவந்தாங்கு - முதிய பசு நாவால் தடவி இன்புற்றாற்போல், விருந்தே காமம் - அக்காமம் புதிய இன்பத்தை உடையதாகும், பெருந்தோளோயே - பெரிய தோள்களை உடைய நண்பனே