குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 203

மருதம் - தலைவி கூற்று


மருதம் - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

பரத்தையிற் பிரிந்த தலைவனுக்குத் தூதாகப் புக்க தோழியைநோக்கி, “தலைவர் உடனுறைந்து அன்பு பாராட்டற்குரிய நிலையினராக இருந்தும் அயன்மை தோன்ற ஒழுகுகின்றார்; அவர்பால் முன்பு பரிவுடையேன்; இப்பொழுது அது நீங்கியது” என்று தலைவி மறுத்துக் கூறியது.

மலை இடையிட்ட நாட்டரும் அல்லர்;
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப் . . . . [05]

பரியலென்மன் யான், பண்டு ஒரு காலே.
- நெடும் பல்லியத்தனார்.

பொருளுரை:

தோழி! தலைவர் மலைகள் இடையிடுவதனாற் சேயதாகிய நாட்டினருமல்லர்; தன்னிடத்துள்ள மரங்கள் நமக்குத் தோன்றாத சேய்மையிலுள்ள ஊரினரும் அல்லர்; கண்ணாலே காணும்படி விரைவில் வருதற்குரிய அணிமையிடத்திலிருந்தும் முனிவரை அணுகி வாழும் பகுதியினரைப் போல மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர் பொருட்டு யான்! முன்பு ஒரு சமயத்தில் பரிதலையுடை யேனாயினேன்; அஃது இப்பொழுது கழிந்ததே!

முடிபு:

நாட்டரு மல்லர்; ஊரரும் அல்லர்; நண்ணு வழியிருந்தும் ஒரீஇயொழுகும் என்னைக்குப் பண்டொருகால் யான் பரியலென்மன்.

கருத்து:

இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும் தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.