குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 398

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது பிரிவைத் தலைவிக்கு உணர்த்திய தோழி, “உலகிலுள்ள மகளிர்தம் தலைவர் வினைமுடித்து வருமளவும் ஆற்றியிருப்பார்” என்று உலகின்மேல் வைத்துக்கூறி, “நீ ஆற்றல் வேண்டும்” என்பதை அறிவுறுத்தினாளாக, “நம்மை அறிவுறுத்துவாரையன்றி நம்துயரைப் போக்குவாரைக் கண்டிலேம்” என்று தலைவி கூறியது.

தேற்றாம் அன்றே - தோழி! தண்ணெனத்
தூற்றும் திவலைத் துயர் கூர் காலை,
கயல் ஏர் உண்கண் கனங் குழை மகளிர்
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய
சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை, . . . . [05]

அரும் பெறற் காதலர் வந்தென, விருந்து அயர்பு,
மெய்ம் மலி உவகையின் எழுதரு
கண் கலிழ் உகுபனி அரக்குவோரே.
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

தோழி! குளிர்ச்சி உண்டாகும்படி தூவுகின்ற மழைத் துளியையுடைய துயரம்மிக்க பொழுதில் கயலை ஒத்த மையுண்ட கண்களையும் கனத்தையுடைய குழையையுமுடைய மகளிர் தம்கையே கருவியாக நெய்யை வார்த்து ஏற்றிய விளக்கு துயரத்தை எழுப்புகின்ற மாலைக்காலத்தில் பெறுதற்கரிய தலைவர் வந்தாராக விருந்து செய்து உடம்பு பூரிக்கும் மகிழ்ச்சியோடு முன் எழுந்த கண் கலங்கியதால் வீழ்கின்ற நீர்த்துளியை துடைப்போரை அறியேம்.

முடிபு:

தோழி, மாலையில் காதலர் வந்தென அயர்பு பனி அரக்குவோரைத் தேற்றாம்.

கருத்து:

என் துன்பமறிந்து அதனைப் போக்குவாரைக் காணேன்.