குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 298

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவன் மடலேறத் துணிந்ததைத் தோழி தலைவிக்கு உணர்த்தியது.

சேரி சேர மெல்ல வந்துவந்து,
அரிது வாய்விட்டு இனிய கூறி,
வைகல் தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன்
பைதல் நோக்கம் நினையாய் - தோழி!
இன் கடுங் கள்ளின் அகுதை தந்தை . . . . [05]

வெண் கடைச் சிறுகோல் அகவன்மகளிர்
மடப் பிடிப் பரிசில் மானப்
பிறிது ஒன்று குறித்தது, அவன் நெடும் புறநிலையே.
- பரணர்.

பொருளுரை:

தோழி! நம்முடைய தெருவின்கண் அடைய மெல்ல வந்து வந்து அருமையின் வாய்திறந்து நம் சிந்தைக்கு இனியவற்றைக் கூறி நாள்தோறும் தான் நினைத்ததொன்று கைகூடாமையின் ஒளிமாறித் தங்குகின்ற அத்தலைவனது துன்பத்தைப் புலப்படுத்தும் பார்வையை நினைத்துக் காண்பாயாக; அவன் நீண்ட நேரம் இங்ஙனம் என் பின்நிற்றல் இனிய கடுமையையுடைய கள்ளையுடைய அகுதைக்குப் பின்நின்ற வெள்ளிய முனையையுடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறும் மடப்பம் பொருந்திய பிடியாகிய பரிசிலைப் போல நம்மைக் கண்டு இனிய கூறுதலேயன்றி வேறுஒன்றைக் கருதியதாயிற்று.

முடிபு:

தோழி, சேரி சேர வந்து வாய்விட்டுக் கூறிப் பெயர்ந்து உறையும் அவன் நோக்கம் நினையாய்; அவன் நிலை பரிசில் மானப்பிறிதொன்று குறித்தது.

கருத்து:

தலைவன் மடலேற நினைந்தான்.