குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 307

பாலை - தலைவி கூற்று


பாலை - தலைவி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனது பிரிவின்கண், “நீ ஆற்றாயாதல் நன்றன்று” என்று இடித்துரைத்த தோழியை நோக்கித் தலைவி கூறியது.

வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர் கொல்லோ தாமே - களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, . . . . [05]

நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?
- கடம்பனூர்ச் சாண்டிலியனார்.

பொருளுரை:

தோழி! பிறை! வளையையுடைத்தாற் போன்றதாகி கன்னி மகளிர் பலரும் தொழும்படி செவ்விய இடத்தையுடைய ஆகாயத்தின் கண் விரைவாகத் தோன்றி இன்னும் பிறந்தது; ஆண்யானை வருந்திய நடையையுடையதனது மடப்பத்தையுடைய பிடியினது வருத்தத்தை பொறாமல் உயர்ந்த நிலையையுடைய யாமரம் அழியும்படி கொம்பாற் குத்தி பசையற்ற வெள்ளியபட்டையைக் கைக்கொண்டு வறுங்கையைச் சுவைத்து மேல் நோக்கி தன் பிடியின் வருத்தத்தைப் போக்க இயலாமையை நினைந்து வருந்துதலையுடைய நெஞ்சோடு பிளிறுகின்ற அரிய வழியையுடைய நீண்ட இடத்து நாம் அழும்படி நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் அந்தோ நம்மை மறந்தனரோ?.

முடிபு:

பிறை இன்னம் பிறந்தன்று; அழப் பிரிந்தோர் மறந்தனர் கொல்?.

கருத்து:

தலைவர் என்னை மறந்தனர் போலும்.