குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 262

பாலை - தோழி கூற்று


பாலை - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவி தலைவனுடன் போவதற்கு நேர்ந்த தோழி, அதனைத் தலைவிக்கு உணர்த்தியது.

ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை
தானே இருக்க, தன் மனை; யானே,
நெல்லி தின்ற முள் எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு - சேய் நாட்டு, . . . . [05]

விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,
கரும்பு நடு பாத்தி அன்ன,
பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.

பொருளுரை:

ஊரில் பழிமொழி உண்டாக தெருவில் உள்ளார் கல்லென்று ஆரவாரிப்ப அமையாமல் நம்மை வருத்துகின்ற அற நினைவில்லாத தாய் தன் வீட்டில் நின்னைப் பிரிந்து தான் ஒருத்தியே இருப்பாளாக; நான் நெடுந்தூரத்தில் உள்ள நாட்டின்கண் வானத்தைத் தொடும்படி உயர்ந்த குறுக்கிட்ட மலையின் அடிவாரத்தில் உள்ள கரும்பை நட்ட பாத்தியைப் போன்ற பெரிய ஆண் யானையினது அடிச்சுவட்டின் கண் தங்கிய நீரை அத் தலைவரோடு நெல்லிக் காயைத் தின்ற முள்ளைப் போலக் கூரிய பற்கள் விளங்கும் படி நீ உண்ணுதலை நினைந்தேன்.

முடிபு:

எழ, கல்லென, அன்னை இருக்க; யான் உணல் ஆய்ந்திசின்.

கருத்து:

நீ தலைவனுடன் போதலுக்கு யான் நேர்ந்தேன்.