குறுந்தொகை

பத்துப்பாட்டுக்களில் இரண்டாவதான பொருநர் ஆற்றுப்படை,சோழன் கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் பாடியது.

நற்றிணை

எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக இடம்பெற்றுள்ள நூல் ‘நற்றிணை’. ‘நல்’ என்னும் அடைமொழியும் அகப்பொருள் ஒழுக்கத்தைச் சுட்டும்

ஐங்குறுநூறு

பத்துப் பாட்டுக்களில் மூன்றாவதான சிறுபாணாற்றுப்படை, ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது.

கலித்தொகை

பத்துப் பாட்டுக்களில் நான்காவதான பெரும்பாணாற்றுப்படை, தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது.

அகநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஐந்தாவது முல்லைப் பாட்டு, காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பாடியது.

பதிற்றுப்பத்து

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் பாடியது.

புறநானூறு

பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை, பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

பரிபாடல்

பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு, ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்குக் கபிலர் பாடியது.

குறுந்தொகை: 115

குறிஞ்சி - தோழி கூற்று


குறிஞ்சி - தோழி கூற்று

பாடல் பின்னணி:

தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.

பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே
ஒரு நன்று உடையள் ஆயினும் புரிமாண்டு
புலவி தீர அளிமதி இலை கவர்பு
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல்
மெல் நடை மரை ஆ துஞ்சும் . . . . [05]

நன் மலை நாட நின் அலது இலளே.
- கபிலர்.

பொருளுரை:

அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த தண்ணிய நறிய மலைப் பக்கத்தின் கண் மெல்லிய நடையையுடைய மரையா இலைகளை விரும்பி உண்டு துயிலுதற்கிடமாகிய நல்ல மலை நாட்டையுடைய தலைவ பெரிய நன்மை யொன்றை ஒருவர் தமக்குச் செய்தால் அங்ஙனம் செய்தாரைப் போற்றாதாரும் உள்ளாரோ? யாவரும் போற்றுவர்; அது சிறப்பன்று; சிறிதளவு நன்மையை இத்தலைவி பெற்றவளாக இருக்கும் காலத்திலும் விருப்பம் மாட்சிமைப்பட்டு புலத்தல் நீங்கும் வண்ணம் இவளைப் பாதுகாப்பாயாக; இவள் நின்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாள்.

முடிபு:

மலைநாட, பெருநன்று ஆற்றிற் பேணாரும் உளரே? ஒரு நன்று உடையள் ஆயினும் அளிமதி; நின்னலதிலள்.

கருத்து:

இவள்பால் இன்று போல என்றும் அன்பு வைத்துப் பாது காப்பாயாக.